சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திசை மாறிய காற்று.. சூப்பர் சான்ஸ்.. டிடிவி தினகரனுக்கு இதை விட்டா நல்ல ஒரு வாய்ப்பு கிடைக்காது!

அதிமுக கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றுவதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    TTV Dinakaran: திசை மாறிய காற்று, டிடிவி தினகரனுக்கு ஒரு நல்ல வாய்ப்பு!- வீடியோ

    சென்னை: அதிமுக கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றுவதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

    தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் எப்போது வரும் என்று மொத்த தமிழகமும் காத்துக் கொண்டு இருக்கிறது.

    தமிழகம் லோக்சபா தேர்தலில் மட்டும் வாக்களிக்கவில்லை, அதோடு சேர்த்து சட்டசபை இடைத்தேர்தலில் வாக்களித்து இருக்கிறது. இதில் 8 இடங்களில் வென்றால் மட்டுமே அதிமுக பெரும்பான்மை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    25 நாட்கள் அல்ல, 25 ஆண்டுகள் ஆனாலும் சரி உங்களால் முடியவே முடியாது.. திமுகவுக்கு முதல்வர் பதில் 25 நாட்கள் அல்ல, 25 ஆண்டுகள் ஆனாலும் சரி உங்களால் முடியவே முடியாது.. திமுகவுக்கு முதல்வர் பதில்

    அதிமுக திட்டம் என்ன

    அதிமுக திட்டம் என்ன

    இதனால் அதிமுக அரசு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள மீண்டும் தகுதி நீக்க அஸ்திரத்தை கையில் எடுத்து உள்ளது. அதிமுகவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்க செய்ய அக்கட்சி முடிவு செய்து இருக்கிறது. அறந்தாங்கி தொகுதியின், ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் தொகுதியின், கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதியின் பிரபு ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு சபாநாயகர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    திமுக பதிலடி

    திமுக பதிலடி

    இதற்கு தற்போது திமுக பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி திமுக தமிழக சட்டசபை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளது. இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதில் வாக்கெடுப்பு நடக்கும் வரை, சபாநாயகர் எந்த ஒரு எம்எல்ஏவையும் தகுதி நீக்கம் செய்ய முடியாது. இதனால் கண்டிப்பாக தமிழக சட்டசபையில் இந்த முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தினகரன்

    தினகரன்

    இங்குதான் டிடிவி தினகரன் கை ஓங்குகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறார்கள். அதேபோல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய 2 எம்எல்ஏக்களும் தினகரனுக்கு ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது. இதனால் தினகரனுக்கு மொத்தம் 6-8 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 8 பேரின் நிலைப்பாடு நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

    என்ன வாக்கெடுப்பு

    என்ன வாக்கெடுப்பு

    இதனால் டிடிவி தினகரன் எடுக்க போகும் முடிவு மிக முக்கியமானதாக மாறுகிறது. அவர் அதிமுக கட்சிக்கு ஆதரவு அளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக ஆட்சி அமைக்க வழி விடுவாரா, இல்லை யாருக்கும் ஆதரவு அளிக்காமல் மீண்டும் தேர்தலை சந்திக்க தயார் ஆவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

    நல்ல வாய்ப்பு

    நல்ல வாய்ப்பு

    நீண்ட நாட்களுக்கு பின் காற்று தற்போது டிடிவி தினகரன் பக்கம் வீச தொடங்கி உள்ளது. தன்னிடம் இருக்கும் எம்எல்ஏக்கள் பலத்தை வைத்து டிடிவி தினகரன் அதிமுகவை வழிக்கு கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது. சிலரை மட்டும் வெளியே அனுப்பிவிட்டு கட்சியையே தனது கட்டுக்குள் கொண்டு வரவும் வாய்ப்புள்ளது என்று அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

    English summary
    TTV Dinakaran will become a deciding factor after this by-election results in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X