ட்யூஷன் வந்த மாணவனுடன் டூயட்! கல்யாணம் என கழற்றி விட்ட ஆசிரியை! ஷாக் முடிவெடுத்த மாணவனால் ‘போக்சோ’!
சென்னை : சென்னை அம்பத்தூர் அருகே பள்ளி முடிந்து கல்லூரியில் சேர இருந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் தருப்பமாக அவனுக்கு ட்யூஷன் எடுத்த பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது
அம்பத்தூர், கள்ளிகுப்பம், கங்கை நகர், வைகை தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் கிருஷ்ணகுமார். 17 வயதான இவர் 12ஆம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு கல்லூரியில் சேர காத்திருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி கிருஷ்ணகுமார் தனது நண்பர்களுடன் சென்னை, மாநிலக் கல்லூரிக்கு கலந்தாய்வுக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். அதன் பிறகு கிருஷ்ணகுமார் வீட்டு படுக்கை அறையில் தூக்கிட்டுத் தற்சொலைக்கு முயன்றார்.

மாணவன் தற்கொலை
இதைப் பார்த்த பெற்றோர் அவரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே கிருஷ்ணகுமார் இறந்த விட்டதாக தெரிவித்தனர்.இதன் பிறகு,உறவினர்கள் சடலத்தை வீட்டுக்கு எடுத்து சென்றனர். பின்னர் தகவல் அறிந்து அம்பத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை
புகார் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கிருஷ்ணகுமார் அம்பத்தூரில் உள்ள சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற போது அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்த சர்மிளா என்ற ஆசிரியர் நடத்தி வந்த ட்யூஷனில் கடந்த 3 ஆண்டுகளாக படித்து வந்துள்ளார்.

ட்யூஷன் ஆசிரியை
அப்பொழுது மாணவன் கிரிஷ்ணகுமாருக்கும் ஆசிரியர் சர்மிளாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இது நாளடைவில் காதலாக மாறி நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ஆசிரியை சர்மிளாவிற்கு அவரது வீட்டில் திருமண வரன் பார்த்து வந்துள்ளனர்.இதன்காரணமாக அவர் மாணவனுடனான நட்பை தவிர்த்து வந்துள்ளார். மேலும் அவருக்கு நிச்சயம் நடைபெற்றுவிட்டதால் ஆசிரியை மாணவனுடனான தொடர்பை முழுவதுமாக துண்டித்து வந்துள்ளார்.

அதிர்ச்சி
இதனால் மாணவன் பலமுறை ஆசிரியை சர்மிளாவை பேச வற்புறுத்தி வந்துள்ளார்,எனினும் ஆசிரியை காதலை தொடர மறுத்ததால் மாணவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளான். இதன் பின்னர் அவனது மொபைலை ஆய்வு செய்ததில் இவை அனைத்தும் வெளி வந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவிக்கின்றனர். ட்யூஷன் சொல்லி கொடுத்த ஆசிரியருடனான நட்பால் மாணவன் வழிமாறி தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவத்தில் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications