பொங்கல் முடிந்ததும் திருப்புமுனை.. ஓபிஎஸ்-க்கு விஜய் சிக்னல்! செங்கோட்டையன் பகிர்ந்த ஹேப்பி நியூஸ்!
சென்னை: தவெகவுடன் காங்கிரஸ், ஓபிஎஸ், அதிமுக முக்கிய தலைவர்கள் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், "பொங்கல் முடிந்ததும் திருப்புமுனை" ஏற்படும் என கூறியிருக்கிறார் முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன். மேலும், அதிமுகவில் இருந்து முக்கிய புள்ளிகள் வருவார்கள் எனவும் கூறியுள்ளார்.
கோபிசெட்டிபாளையம் கரட்டூர் தமிழக வெற்றிக் கழக கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், வேலு நாச்சியார் நினைவு தினத்தை ஒட்டி அவரது அலுவலகத்தில் வேலு நாச்சியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்,
அதனை தொடர்ந்து, அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாத்தூர் பகுதியில் அதிமுகவைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் தலைமையில் 50 பேர் தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

செங்கோட்டையன் பேச்சு
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன்," எதிர்கால தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம். எம்ஜிஆர் 1972 அதிமுகவை காணும் போது கழகத்திலிருந்து தூக்கி எறியும் நேரத்தில், இதே நிலை அன்றைக்கு உருவாகியது. அதேபோல தான் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி ஆண்ட கட்சிகள் தமிழ்நாட்டில் இருக்க வேண்டுமா என்ன? புதிய வரலாற்றை படைப்பதற்கு ஒரு தலைவர் தேவை என்ற முறையில் மக்கள் மட்டுமின்றி இளைஞர்கள் உள்ளங்களில் நிறைந்து இருக்கிறது. புதிய வரலாற்றை படைப்பதற்கு, புதிய தமிழகத்தை உருவாக்குவதற்கு, முழுமையாக நின்று மக்கள் சக்தியோடு ஆட்சிக்கட்டிலில் விஜய் அமர்வதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்து முடியாது.
தவெக வளர்ச்சி
வாக்காளர் பட்டியல் பொருத்தவரை 97லட்சத்து 37ஆயிரத்து 812 பேர் நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த போனவர்களின் பட்டியல், வேற இடத்திற்கு சென்றவர்கள் ஒருவரே இருவரு இடத்தில் பதிவு செய்வது. இருப்பினும் உண்மையான வாக்களிக்க கூடியவர்கள் யார் என்பது குறித்து கவனம் செலுத்த இருக்கிறோம். ஜனவரி 18 தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆங்காங்கே நடைபெறக்கூடிய முகாமில் பணிகளை வேகமாக செய்வதற்கு நேற்றைய தினம் தலைவர் கட்டளையிட்டு மாவட்ட செயலாளர்கள் வருகை தந்து பணிகளை மேற்கொண்டனர்.
தமிழக வெற்றிக் கழகம்
இளைஞர்களாக வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் எடுத்து செல்வதற்கும் விடுபட்டு இருக்கக்கூடிய வாக்காளர்கள், இதுவரை இல்லாத இந்திய தேர்தல் ஆணையத்தின் உடைய ஆணைப்படி ஒவ்வொருவரும் தனித்தனியாக விண்ணப்பம் தர வேண்டும் என்ற நிலை இருக்கிறது. விடுபட்டவர்கள் யார்? வாக்காளர் யார்? என்பது அறிந்து பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ளவர்கள் மற்றும் இணைந்துள்ள நாங்களும் சேர்ந்து பணிகளை வருகின்ற ஒரே முகாமில் மூன்று நாட்களுக்குள் முடித்து தலைமைக்கு முதல் மாவட்டம் என்ற முறையில் தலைவருக்கு சமர்ப்பிப்போம்.
ஓபிஎஸ் அதிமுக
ஓபிஎஸ் தமிழக வெற்றி கழகத்தில் வருவது குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலும் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்ல வேண்டும் என கருத்து பரிமாறப்பட்டிருக்கிறது. இதனால் ஓபிஎஸ் தான் முடிவுகளை மேற்கொள்வார். கூட்டணி குறித்து தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதை ஏற்று பணி செய்ய இருக்கிறோம். ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் இரண்டு கேள்விகளை விஜய் கேட்டார். அதற்கு தெளிவாக பதில்கள் தரப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு இயக்கத்தைச் சார்ந்தவர் ஒவ்வொருவரோடு நட்பின் அடிப்படையில் கலந்து பேசுவது வழக்கம். ஆனால் தேர்தல் கூட்டணி என்பது எதிர்காலத்தில் யாரெல்லாம் வருகிறார்கள் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதிமுகவில் இருந்து முக்கிய புள்ளிகள் வருவார்கள் மிக விரைவில் வந்து விடுவார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications