கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக சொன்ன புஸ்ஸி ஆனந்த்.. மனு தள்ளுபடி!
சென்னை: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கரூர் நெரிசல் சம்பவத்தில் அவர் மீதான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், முன் ஜாமின் மனுவை வாபஸ் பெறுவதாக அவர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்து தள்ளுபடி செய்தது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்திருந்தது. மீண்டும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற விரும்புவதாகக் கூறி ஐகோர்ட்டில் புஸ்ஸி ஆனந்த் மனு தாக்கல் செய்தார்.
த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கரூர் நெரிசல் சம்பவத்தில் அவர் மீதான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக அவர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்அ தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்து தள்ளுபடி செய்தது.
கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திவரும் நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் இருவருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தச் சம்மனில், இருவரும் அக்டோபர் 29 ஆம் தேதி கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் அதன் பின்னணி குறித்து இந்தக் கூட்டத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டியரிங்கை பிடித்த விஜய்.. 'சிங்கப்பெண்' திட்டத்தை தொடங்கி வைத்து கையோடு ரோந்து வாகனத்தை ஓட்டினார்! -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
பாஜக கோபத்திற்கு ஆளாக நேரிடும்! இந்தியா கூட்டத்திற்கு தவெக போகாதது ஏன்? விஜய் எடுத்த பயங்கர முடிவு? -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
விஜய் அரசுக்கு முதல் அக்னிப்பரீட்சை.. நெருப்பிற்குள் நுழையும் மோதல்.. 5 தொகுதிகளில் என்ன நடக்கும்? -
நீட் தேர்வு ரத்து மசோதா நிறைவேற்றப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய பதில்! -
மின் தடை பரிதாபங்கள்.. சென்னைல மட்டும் தங்கத்தில் பியூஸ் கேரியர் இருக்குமோ.. தெறிக்கும் மீம்ஸ்! -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
மின்துறைக்கு குட்நியூஸ்.. 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.. அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி அறிவிப்பு -
கட்சி நிகழ்ச்சியா? அரசு ஆய்வுக் கூட்டமா? அமைச்சருக்கு இணையாக அதிகாரிகளுடன் அமர்ந்த தவெக நிர்வாகி!












Click it and Unblock the Notifications