மத்திய மாநில உறவுகள் குறித்து ஆராய ஸ்டாலின் அமைத்த குரியன் ஜோசப் குழு கலைப்பு.. விஜய் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முந்தைய திமுக ஆட்சியில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்டிருந்த உயர்மட்டக் குழுவை கலைத்து தவெக அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு, மாநிலங்களின் உரிமைகள், நிதி அதிகாரங்கள், ஆளுநர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக, முந்தைய அட்சி காலத்தில் 2025 ஏப்ரலில் அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்நிலைக் குழுவை அமைப்பதாக சட்டப்பேரவையில் அறிவித்தார்.

TVK Government

அதன்படி, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மு.நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், நடைமுறையில் உள்ள சட்டங்கள், மத்திய அரசின் கொள்கை முடிவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தவும் மாநில சுயாட்சியை உறுதி செய்யவும் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் நிர்வாக மாற்றங்களைப் பரிந்துரைப்பது இந்தக் குழுவின் முக்கியப் பணியாக இருந்தது.

குறிப்பாக, மாநிலங்களின் சட்டமியற்றும் அதிகாரம், நிர்வாக அதிகாரம், நிதி உரிமைகள் ஆகியவற்றில் மத்திய அரசின் தலையீடுகள் குறித்தும், அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாகச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள இந்தக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு தனது முதல் ஆய்வறிக்கையை கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. தொடர்ந்து மத்திய - மாநில உறவுகள் தொடர்பான பிற அம்சங்களை ஆய்வு செய்து அடுத்தகட்ட அறிக்கைகளைத் தயாரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டிருந்தது.

இந்தக் குழுவின் முதல் ஆய்வறிக்கை தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் தயாரிக்கப்பட்டது. சுமார் 408 பக்கங்களைக் கொண்ட முதல் அறிக்கையில் 10 அத்தியாயங்கள் இடம்பெற்றிருந்தன. ஆளுநர்களின் அதிகாரங்கள், தொகுதி மறுவரையறை, மொழிக் கொள்கை, கல்வி, சுகாதாரம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு, மாநில சுயாட்சி உள்ளிட்ட முக்கியமான விவகாரங்கள் ஆய்வு செய்யப்பட்டிருந்தன.

குறிப்பாக, ஆளுநர்களை நியமிக்கும் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் 15 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியைப் பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும், ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநிலங்களின் வாக்குரிமையை அதிகரிக்க வேண்டும், மக்களவைத் தொகுதிகளின் மாநிலவாரியான ஒதுக்கீட்டை 2126-ஆம் ஆண்டு வரை மாற்றக்கூடாது என்பன உள்ளிட்ட முக்கியமான பரிந்துரைகள் முதல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து குரியன் ஜோசப் குழுவைக் கலைத்து விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு நவம்பர் 6 ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.

மத்திய - மாநில உறவுகள் தொடர்பான இந்த உயர்நிலைக் குழுவானது சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல என்றும், ஆகஸ்ட் 7 ஆம் தேதி மறுசீரமைக்கப்பட்ட தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் பணிகளுக்கும் இந்தக் குழுவின் பணிகளுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதால் குழு கலைக்கப்படுவதாகவும் தவெக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+