85% உள்ளாட்சி பதவி எங்களுக்கு.. உங்களுக்கு 15% பதவி.. கூட்டணி கட்சிகளுடன் பேசத் தொடங்கிய தவெக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் 85 சதவிகித பதவிகளில் தவெகவை நேரடியாக களமிறக்க அக்கட்சி தலைமை விரும்புவது தெரிய வந்துள்ளது. மீதமுள்ள 15 சதவிகித இடங்களை மட்டும் காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கு தவெக தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் பதவியை பிடித்துவிட வேண்டும் என்று தவெகவினர் தீவிரமாக இருக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தல் வெற்றி தான் கிராமங்கள் தொடங்கி அனைத்து பகுதிகளிலும் தவெகவிற்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும். இதனால் மொத்தமுள்ள உள்ளாட்சிப் பதவிகளில் 85% தவெகவினருக்கே கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

TVK

நேற்றிரவு திடீரென பனையூர் தவெக அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனை நடைபெற்று இருக்கிறது. அதேபோல் வேலூர் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு இடையிலான உட்கட்சி பூசலையும் முடிவுக்கு கொண்டு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் தவெக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அதிக இடங்களை எதிர்பார்க்கின்றன. குறிப்பாக மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளை கைப்பற்ற காய் நகர்த்தி வருகின்றன. ஆனால் தவெக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி 15% இடங்களுக்கு ஒப்புக்கொள்ள வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மாநகராட்சிகளில் அதிக இடங்களை பெற கூட்டணி கட்சிகள் காய் நகர்த்தி வரும் சூழலில், தவெக தரப்பு மாநகராட்சிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது. அதுமட்டுமல்லாமல் உள்ளாட்சித் தேர்தலில் விஜய்யை நம்பி மட்டும் களமிறங்க முடியாது என்பதால், உள்ளூரில் செல்வாக்கு இருக்கும் நபர்களை தங்கள் பக்கம் கொண்டு வர தவெக தயாராகி வருகிறது.

அதேபோல் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தான் உள்ளாட்சித் தேர்தலுக்கு பொறுப்பேற்க உள்ளனர். யாருக்கு சீட், எந்த இடம் கூட்டணிக்கு என்பதெல்லாம் அவர்களின் கட்டுப்பாட்டிற்கு செல்ல உள்ளது. இதனால் தவெகவில் பெரிய மோதல் ஏற்படாமல் இருக்க, முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி முடிக்க தயாராகி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+