என்னதான் ஆச்சு விஎஸ் பாபுவுக்கு.. அட்மிட் ஆகி 50 நாள்! ஒரு மாதமாக வராத மருத்துவமனை அறிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்றுடன் 50 நாட்கள் நிறைவடைந்துள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து, செப்டம்பர் 22க்குப் பிறகு மருத்துவமனை அறிக்கை வெளியாகவில்லை. இந்நிலையில் அவர் எப்படி இருக்கிறார் என அவரது ஆதரவாளர் குழப்பமடைந்துள்ளனர்.

2026 தமிழக சட்ட்சபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விஎஸ் பாபு போட்டியிட்டார். முதல்வராக இருந்த முக ஸ்டாலின் 74 ஆயிரத்து 22 வாக்குகள் பெற்ற நிலையில், விஎஸ் பாபு 82997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

TVK MLA VS Babu

சுமார் 80, 700 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார் ஸ்டாலின். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இருந்த போதும் நேரடியாக மக்களை சந்தித்து நன்றி தெரிவித்திருந்தார் ஸ்டாலின்.

விஎஸ் பாபு

இருந்த போதும் விஎஸ் பாபு ஸ்டாலினின் கேம் ஓவர் செய்கையை செய்து காட்டியதன் மூலம் தான் சமூக வலைத்தளங்களில் பிரபலமானார். காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு முடிந்ததும் முக ஸ்டாலின் அறிவாலத்தில் இருந்து புறப்பட்டபோது ஒரு கையில் சைகை காட்டியது வைரலானது. தேர்தல் முடிவுகள் வந்த போது விஎஸ் பாபு இரண்டு கைகளால் கேம் ஓவர் செய்கையை செய்து காட்டினார்.

சட்டசபை தேர்தல்

இந்த நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த தமிழக சட்ட சபையில் சில நிகழ்வுகளில் மட்டுமே வி எஸ் பாபு பங்கேற்றார். பின்னர் பெரும்பால நாட்களில் அவர் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் உடன் நலனக் குறைவு காரணமாக அவர் பாதிக்கப்பட்டு இருப்பதால் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதி

தொடர்ந்து மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். வி எஸ் பாபுவின் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறிவந்தது.

தீவிர சிகிச்சை

தற்போது விஎஸ் பாபுவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், கவலைக்கிடமான நிலையில், மருத்துவனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் விஎஸ் பாபுவின் உடல் நலன் குறித்து மருத்துவமனை தரப்பில் அறிக்கை எதுவும் வராததும் சந்தேகத்தை அதிகப்படுத்தி இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கின்றனர்.

மருத்துவமனை அறிக்கை

செப்டம்பர் 9ஆம் தேதி வி எஸ் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 22ஆம் தேதி வரை அடிக்கடி மருத்துவமனை தரப்பிலிருந்து அவரது உடல்நிலை குறித்து அறிக்கைகள் வெளியிட்டது. பெரும்பாலும் அவரது உடல் நலம் நலமாக இருப்பதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக மட்டுமே அவ்வப்போது அறிக்கைகள் வெளிவந்தது.

ஆதரவாளர்கள் கவலை

ஆனால் செப்டம்பர் 22ஆம் தேதிக்கு பிறகு அக்டோபர் மாதம் முழுவதும் அவர் உடல்நலன் குறித்து எந்த அறிக்கையும் வெளிவரவில்லை. ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி இருக்கிறார் என தெரிந்து கொள்வது அந்த தொகுதி மக்களின் உரிமை. ஆனால் வி எஸ் பாபுவின் உடல்நிலை குறித்து எவ்வித அறிக்கையும் அளிக்காமல் இருப்பதால் பொதுமக்கள் குழப்பத்தில் இருப்பதாகவும், அவரது உடல் நலம் தொடர்பாக உரிய விளக்கத்தை அரசு தரப்பில் இருந்தோ மருத்துவமனை தரப்பிலிருந்து வெளியிட வேண்டும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+