வெறும் வார்த்தை ஜாலம்! ஒன்றும் உதவாது! மத்திய பட்ஜெட் பற்றி வேல்முருகன் அதிருப்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான பட்ஜெட் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை என வேல்முருகன் வேதனை தெரிவித்திருக்கிறார்.

மேலும் மத்திய பட்ஜெட் 2022 பற்றி வேல்முருகன் கூறியிருப்பதாவது;

ஒன்றிய பட்ஜெட்

ஒன்றிய பட்ஜெட்

ஒன்றிய அரசின் பட்ஜெட் என்பது நாட்டின் வேளாண் வளர்ச்சியை எந்த வகையிலும் மேம்படுத்தாது. வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவதெல்லாம், வார்த்தை ஜாலமே தவிர, நாட்டின் வளர்ச்சிக்கோ, மக்களின் வாழ்வாதாரத்திற்கோ ஒன்றும் உதவாது.

விளக்கம் தர முடியுமா?

விளக்கம் தர முடியுமா?

கடந்தாண்டு 2021 - 2022ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது, வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக உரையாற்றிய நிதியமைச்சர், வேளாண் துறையை மேம்படுத்த எடுத்த திட்டங்கள் என்ன?. இயற்கை வேளாண்மையை மேம்படுத்த முன்னெடுத்த நடவடிக்கைகள் என்ன? வேளாண் துறையில் என்ன மாதிரியான மாற்றங்களை முன்னெடுக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்க முடியுமா?.

மானியம் என்ன?

மானியம் என்ன?

டி.ஏ.பி, யூரியா போன்ற உரங்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாத ஒன்றிய அரசு, விவசாயிகள் குறித்து நீலி கண்ணீர் வடிப்பது , மக்களை ஏமாற்றும் செயல். வேளாண் வளர்ச்சி குறித்தும், விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்தும் கவலைப்படும் ஒன்றிய அரசு, உரங்களுக்கு அளித்த மானியம் என்ன?

ஊரக வேலை

ஊரக வேலை

கிராமப்புற ஊரக வேலை உறுதித் திட்ட நாட்களை 250ஆக உயர்த்த வேண்டும், ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில், அதுகுறித்த எந்த அறிவிப்பும் இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. அதே போன்று, நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை.

காவிரி - குண்டாறு

காவிரி - குண்டாறு

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டில் கோரிக்கை எழுந்து வரும் இச்சூழலில், அதுகுறித்து கவலைப்படாத ஒன்றிய அரசு, காவிரி, கோதாவரி உள்ளிட்ட 5 நதிகளை இணைப்பதாக கூறுவது ஏமாற்று வேலை. அப்படி அத்திட்டத்தை சாத்தியப்படுத்தப் முயன்றாலும் கூட, அதனை செயல்படுத்த மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளாது.

ஏழு ஆண்டுகளில்

ஏழு ஆண்டுகளில்

மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவுடன், ஆண்டிற்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த ஏழு ஆண்டுகளில் எத்தனை கோடி வேலை வாய்ப்புகளை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது? கடந்த காலங்களில் லட்சக்கணக்கானனோர் வேலை இழந்தது தான் மிச்சம்.

பி.எஸ்.என்.எல்

பி.எஸ்.என்.எல்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை வழங்க வேண்டும் என்று அந்நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில், அவர்களின் வேலைவாய்ப்பு கேள்வி குறியாகி உள்ளது. ஆயிரக்கணக்கோருக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும் அந்நிறுவனம், மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இதனையெல்லாம் கவலைப்படாத ஒன்றிய அரசு, நடப்பாண்டில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான ஏலம் விடப்படும் என்று அறிவித்துள்ளது.

 வருமான வரி

வருமான வரி

சமூக, பொருளாதார அடித்தளத்திற்கு முக்கியமான பங்களிப்பை செய்து வரும் எல்.ஐ.சி-யின் பங்குகளை விற்கவும் ஒன்றிய அரசு தீவிரமாக இருப்பதை இந்த பட்ஜெட்டின் வாயிலாக தெரிய வருகிறது. தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, வருமான வரி உச்ச வரம்பு மாற்றமின்றி 2.5 லட்சம் ரூபாயாக தொடர்கிறது. இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+