Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மலேசியாவிலிருந்து திரும்பி வந்ததும்.. முதல் வாக்குறுதி? பழைய ஓய்வூதிய திட்டம்? விஜய் பிரம்மாஸ்திரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் படத்தின் ஆடியோ லாஞ்சுக்காக விஜய் மலேசியா சென்றுள்ளார். நேற்று இந்த நிகழ்வோடு விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில்தான் விஜய் தமிழ்நாடு வந்ததும் தனது முதல் தேர்தல் வாக்குறுதியை அறிவிப்பார் என்கிறார்கள். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி, வரும் நாட்களில் பல தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளன. அதற்கு முன்பாக இதை தேர்தல் வாக்குறுதியாக வழங்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

bonus dearness allowance

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK), 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது. கட்சி வட்டாரங்களின்படி, TVK தலைவர்கள் ஓய்வுபெற்ற IAS அதிகாரிகளுடன் இணைந்து தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இது, ஒரு நடைமுறைப்படுத்தக் கூடிய, மக்கள் நலன் சார்ந்த தேர்தல் அறிக்கையை உருவாக்க உதவும் என கட்சி தெரிவித்துள்ளது.

விஜய் வழங்கும் தேர்தல் வாக்குறுதி

தொடர்ந்து போராட்டங்கள் மூலமும், கோரிக்கை மனுக்கள் வாயிலாகவும் அரசு ஊழியர்கள் பலர் அரசுக்கு எதிராக நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளனர். அதன்படி அரசு ஊழியர்கள் பலர் ஆளும் திமுக அரசுக்கு எதிராக உள்ளனர். பழைய ஓய்வூதியத்தை கொண்டு வர வேண்டும் என்றுகூறி விட்டு.. இப்போது வரை கொண்டு வரவில்லை என்று திமுக மீது கோபத்தில் உள்ளனர்.

இதை மனதில் வைத்து பழைய பென்ஷன் கொண்டு வருவோம் என்று தேர்தல் வாக்குறுதி வழங்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆளும் திமுக இதை மீண்டும் கொண்டு வருவதற்கு முன்பாக அதை வாக்குறுதியாக வழங்க வேண்டும் என்று விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பழைய ஓய்வூதிய திட்டம்

அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வரும் நவம்பர் மாதத்திற்குள் இதில் ஒரு முக்கிய முடிவு எட்டப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகவும், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வுபெறும் ஊழியரின் கடைசி மாத சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும். மேலும், அகவிலைப்படியும் (DA) அவ்வப்போது திருத்தப்படும். இது ஓய்வுக்குப் பின் ஊழியர்களுக்கு சிறந்த நிதி பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் வழங்குகிறது.

தமிழக அரசின் திட்டம் - பழைய ஓய்வூதிய திட்டம்

ஜனவரி 1, 2004 முதல், புதிய அரசு ஊழியர்களுக்கு OPS திட்டம் நிறுத்தப்பட்டு, தேசிய ஓய்வூதிய முறை (NPS) அறிமுகப்படுத்தப்பட்டது. NPS என்பது சந்தை அடிப்படையிலான பங்களிப்புத் திட்டமாகும், இதில் ஓய்வூதியம் முதலீடுகளின் சந்தை செயல்பாட்டைப் பொறுத்தது. சமீபத்தில் சில மாநிலங்கள் OPS திட்டத்தை தங்கள் ஊழியர்களுக்கு மீண்டும் அமல்படுத்தியுள்ளன. எனினும், பெரும்பாலான மாநிலங்களில், 2004-க்கு முன் பணியில் சேர்ந்தவர்கள் மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள்.

அக்டோபர் 1 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றும் வசதி ஏற்படுத்தப்படும் என்ற சமீபத்திய அறிவிப்பு சற்று ஆறுதல் அளித்துள்ளது. இருப்பினும், இது பழைய ஓய்வூதியத் திட்டக் கோரிக்கையுடன் ஒப்பிடுகையில் ஒரு சிறிய சலுகையாகவே பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்குவதால், ஸ்டாலின் அரசு விரைவில் ஊழியர்களுக்கு நல்ல செய்தி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குவது போன்ற பிற வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகலாம். இதற்கான ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் பரிந்துரைகள் அடுத்த சில வாரங்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பல்வேறு சலுகைகள் மற்றும் பிற கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது. பழைய ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்ற நம்பிக்கையில் அரசு ஊழியர்கள் உள்ளனர்.

சட்டமன்றத் தேர்தல்- Old Pension Scheme

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பே இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. OPS திட்டம் நடைமுறைக்கு வந்தால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படும் என்பதால், இழப்புகளைக் குறைக்கும் வகையில் சில மாற்றங்களுடன் இத்திட்டத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு பாரம்பரியமாக அதிகம். ஆனால், தற்போதைய ஆட்சியில் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் ஒருவித அதிருப்தி நிலவுகிறது. இதனால் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திமுகவுக்கு எதிராக வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. தபால் வாக்குகள் அதிமுக, பாஜகவுக்குச் சென்றது இதற்குச் சான்றாகக் கூறப்படுகிறது. எனவே, அரசு ஊழியர்களின் மனதை திருப்திப்படுத்தும் வகையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+