ஓ விஜய் தானா அது? ஒரு பிரம்மாண்டமான கட்சி வருதுன்னு எடப்பாடி சொன்னாரே.. நெருங்கும் தவெக - அதிமுக
சென்னை: அதிமுக கூட்டணிக்கு பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி கிட்டத்தட்ட 2 மாதம் ஆகிவிட்டது. ஆனால் அதிமுக உடன் கூட்டணி வைக்க இதுவரை எந்த பெரிய கட்சியும் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இப்போது திடீரென பாஜக - அதிமுக - தவெக நெருக்கமாகி இருப்பதால் இவர்களுக்கு இடையே கூட்டணி அமைய உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி - பிரம்மாண்ட கட்சி பேச்சு
காட்டுமன்னார் கோவில் பகுதியில் எடப்பாடி பழனிசாமி கடந்த சில வாரங்களுக்கு முன் பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு.. அனுமதி அளிக்கப்படுவதில்லை.. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.. விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்?

இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது சரியாக இருக்கும்.
அடுத்து பாருங்க.. ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. பிரம்மாண்டமான கட்சி.. எதிர்பார்த்துக்கொண்டு இருங்கள்.. வருவதை பாருங்கள்.. ஸ்டாலின் அவர்களே.. பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.. நாங்கள் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெல்வோம். அதோடு தனித்து ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
புதிர் போட்ட எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி கூறிய கட்சி எது என்ற பெரிய கேள்வி எழுந்தது. ஏனென்றால் பாஜக கூட்டணிக்கு காங்கிரஸ் வராது. விசிக, சிபிஎம்க்கு இப்போதுதான் எடப்பாடி அழைப்பே விடுத்துள்ளார். அதனால் அவர்கள் இல்லை. அமமுக கூட்டணியில் உள்ளது. இது போக நாம் தமிழர் - தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே உள்ளது.
இதில் நாம் தமிழர் பாஜகவை எதிர்க்கும் கட்சி. ஆனால் நாம் தமிழர் - பாஜக இடையே கூட்டணி உருவாக போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வருகின்றன. இன்னொரு பக்கம் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிமுக உடன் செல்கிறதா என்பதும் கேள்விதான். ஆனால் விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிட்டார். இது எடப்பாடிக்கு ஏற்றதாக இருக்காது. எடப்பாடி தான்தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லிக்கொள்கிறார். இன்னொரு பக்கம் அவர் பாஜக உடன் சேர்வாரா என்பது சந்தேகம். ஏனென்றால் அவர்கள்தான் விஜயின் கொள்கை எதிரி. இதனால் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிடும் அந்த பிரம்மாண்ட கட்சி எது என்ற கேள்வி எழுந்தது.
கரூர் விவகாரம்
இப்படிப்பட்ட நிலையில்தான் கரூர் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக எடப்பாடி பேசி வருகிறார். கரூர் விவகாரம் காரணமாக இப்போது திடீரென பாஜக - அதிமுக - தவெக நெருக்கமாகி இருப்பதால் இவர்களுக்கு இடையே கூட்டணி அமைய உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய் தேர்தல் நேரத்தில் கூட்டணி கேட்டிருந்தால் 100+ இடங்களை கேட்டிருப்பார். இப்போது சிக்கல் இல்லை. விஜய் பேரம் பேசும் இடத்தில் இல்லை. அவருடன் இப்போது வலுவான நபர்கள் இல்லை. இப்போது அவருக்கு உதவியாக நாம் நிற்கலாம். 30-40 இடங்கள்தான் கொடுப்போம் என்று கூறி அவரை சம்மதிக்க வைக்கலாம். அவரை நாம்தான் வழிகாட்ட வேண்டும். வேறு தலைவர்கள் அவருக்கு இல்லை என்று எடப்பாடி நினைக்கிறாராம்.
இதனால் விரைவில் விஜய் - எடப்பாடி இடையே போன் கால் உரையாடல் - அல்லது நேரில் பேச்சுவார்த்தைகள் நடக்க வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
“திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள்.. யாரும் தப்பிக்க முடியாது”.. அமைச்சர் CTR நிர்மல்குமார் உறுதி!












Click it and Unblock the Notifications