ஆதவ் அர்ஜுனா டைரக்டர்.. விஜய் நடிகர்.. பிரஸ்மீட் வைக்ககூட தில் இல்லையே.. ஜெயக்குமார் அட்டாக்!
சென்னை: ஆட்சியில் பங்கு தருவதாக தவெக தலைவர் விஜய் கூறியும் யாரும் அவருடன் செல்லவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஏதோ தனக்குதான் தில் இருப்பது போல் பேசும் விஜய், செய்தியாளர்களை சந்திக்க தயங்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சாவூரில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசுகையில், திமுக - அதிமுக இடையில் டீல் வைத்து கொண்டுள்ளதாக விமர்சித்தார். அதேபோல் கரூர் விவகாரம் முதல் ஜனநாயகன் விவகாரம் வரை தன் மீது அதிமுக பழி போடுவதாகவும் குற்றம்சாட்டினார். ஏற்கனவே அதிமுகவை ஊழல்வாத கட்சி என்றும், அடிமை கூட்டணி என்றும் விஜய் விமர்சித்திருந்தார்.

அதேபோல் அதிமுக கூட்டணி என்று சொல்லாமல், பாஜக தலைமையிலான கூட்டணி என்றும் சீண்டினார். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி பலரும் பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் விஜய்யின் இன்றைய பேச்சிற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து ஜெயக்குமார் பேசுகையில், ஒரு ஸ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்து பேசுவது மிகவும் எளிது. அதனை யார் வேண்டுமானாலும் பேச வேண்டும். விஜய் ஒரு கைதேர்ந்த நடிகர்.. அதனால் விஜய்க்கு சொல்லி தரத் தேவையில்லை.. எப்படியான பேச்சிற்கு எப்படி உடல்மொழியை வெளிப்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் சொல்லி தரத் தேவையில்லை.
நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், விஜய்க்கு தைரியம் இருந்தால் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும்.. எந்த பிரச்சனையென்றாலும் செய்தியாளர்களை சந்திக்கும் தில், திராணி எங்களுக்கு உள்ளது. விஜய்க்கு அந்த தில் இல்லை.. ஆனால் தனக்கு மட்டுமே தில் இருப்பதை போல் எழுதி கொடுத்த பேப்பரை பேசுகிறார்.. ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் தான் டைரக்டர்..
அதேபோல் அதிமுக தலைமை நிலையத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்பதை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்க கூடாது. கூட்டணி கட்சிகளுக்கு இடையில் பரஸ்பர மரியாதை, பரிமாற்றம் இருக்கும்.. அதனை யாரும் பெரிதுபடுத்த தேவையில்லை. பாஜகவிடம் அமமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடு செய்வோம் என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துவிட்டார்.
அதனால் மீண்டும் அதுதொடர்பாக பேச விரும்பவில்லை. அதேபோல் விஜய் ஆட்சியில் பங்கு கொடுக்கிறோம்.. அதிகாரத்தில் பங்கு கொடுக்கிறோம் என்று அறிவித்தார். ஆனால் யாரும் விஜய்யுடன் கூட்டணி அமைக்க செல்லவில்லை.. இதனால் அதிமுகவை வம்புக்கு இழுக்க தொடங்கி இருக்கிறார். அதிமுகவை வம்பிழுத்தால் விஜய் வாங்கிக் கட்டிக்கொள்ள நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.
-
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications