TVK Vijay: விஜய்யை பாதுகாக்கும் துபாய் டீம்.. புரளும் கோடிகள் புஸ்ஸி, ஆதவ் ஷாக்!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு ஒரு வாரமே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். விஜய் அரசியல் வருகை இந்த தேர்தலை சுவாரஸ்யமாக்கியுள்ளது. விஜய்யின் பாதுகாப்புக்காக துபாயைச் சேர்ந்த நிறுவனத்துடன் கோடிக்கணக்கில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி புஸ்ஸி, ஆதவ் உள்ளிட்ட சீனியர்களுகே தெரியாதளவுக்கு ரகசியமாக உள்ளதாம்.
நடிகர் விஜய் தவெக என்கிற கட்சி மூலம் தீவிர அரசியலுக்குள் நுழைந்துள்ளார். முதல்முறையாக சட்டசபை தேர்லை எதிர்கொள்ளவுள்ளனர். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு வியூக வகுப்பாளர்கள் இருக்கிறார்கள். அதனுடன் தற்போது ஒவ்வொரு தலைவருமே தனித்தனி வியூக வகுப்பாளர்களை வைத்துள்ளனர். தவெகவுக்கு ஜான் ஆரோக்கியசாமி என்பவர் வியூக வகுப்பாளராக உள்ளார்.

தவெக கூட்டத்தில் மாற்றம்
ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் வியூக நிறுவனமும் தவெகவுக்கு பணியாற்றி வருகிறது. அதனுடன் விஜய்யின் பாதுகாப்புக்காகவும் ஒரு நிறுவனம் பணியாற்றி வருகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு தவெக கூட்டங்களில் மாற்றங்கள் செய்து வருகிறார்கள். ஆனாலும் ஒவ்வொரு பகுதியிலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள்.
இதனால் விஜய் தனக்கென்று ஒரு பிரத்யேக பாதுகாப்பு நிறுவனத்தை பணியமர்த்தியுள்ளார். ஏற்கனவே விஜய்க்கு மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதனுடன் பாதுகாப்புக்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த நயிம் மூஸா என்பவர் துபாயில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
பாதுகாப்பு நிறுவனம்
துபாய், கத்தார், குவைத், இந்தியா, சவுதி அரேபியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனம் பாதுகாப்பு சேவை வழங்கி வருகிறது. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட்டின் பிரபல நடிகர்கள், பிரபல தொழிலதிபர்கள், விஐபிக்கள், விவிஐபிக்களுக்கு பாதுகாப்பு சேவை கொடுக்கிறார்கள். தற்போது விஜய்யின் பாதுகாப்பையும் மேற்பார்வை செய்கிறார்கள்.
புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளே நயீமிடம் அனுமதி பெற்று தான் விஜய்யை சந்திக்க முடியுமாம். நயீம் கேரளாவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்றதற்காக விஜய் தன் ஒரு நாள் பிரச்சாரத்தையே ரத்து செய்யுமளவுக்கு நம்பகத்தன்மையை பெற்றுள்ளார். விஜய் நயீமுக்கு வழங்கும் முக்கியத்துவம் தவெக மூத்த நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
களத்தில் 100 பேர்
கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் பிரச்சாரத்திற்கு இந்த நிறுவனம் சார்பில் 100 பேர் பாதுகாப்பு பணியில் வருகின்றனர். ஆனால் அந்த 100 பேர் யார் என்று நயீம் உள்ளிட்ட ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியுமாம். அந்தளவுக்கு பாதுகாப்பில் ரகசியம் கடைபிடிக்கிறார்களாம். இந்த டீமிடம் விலை உயர்ந்த செல்போன்கள், நவீன கருவிகள் மூலம் கூட்டத்தை கண்காணிக்கிறார்களாம்.
அதில் எல்லாமே சரியாக இருந்தால் தான், பிரச்சாரத்தை தொடரலாம் என்று அந்த டீம் உத்தரவு கொடுக்கிறதாம். அந்த டீம் நோ சொல்லிவிட்டால் பிரச்சாரம் தொடராது. அதனடிப்படையில் தான் விஜய்யின் பல கூட்டங்கள் சமீபத்தில் அதிகளவு ரத்து செய்யப்பட்டன. இந்த டீமுக்காக விஜய் கோடிக்கணக்கில் செலவு செய்கிறாராம்.












Click it and Unblock the Notifications