தவெக முதல் பொதுக்குழு.. உணவு பட்டியல் என்ன தெரியுமா? அதுவும் அந்த ஒரு மேட்டர்.. விஜய் சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கான காலை மற்றும் மதிய உணவு பட்டியல் வெளியாகி உள்ளது. காலை டிபன் 1500 பேருக்கும், மதிய உணவு 2500 பேருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை உணவாக பொங்கல், வடை, சட்னி, சாம்பார், டீ வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலக செட்டோடு பிரம்மாண்டமாக இதற்காக நுழைவு வாயில் தயார் செய்யப்பட்டு உள்ளது. கட்சி அடிப்படை அமைப்பு, பூத் கமிட்டி அமைப்பது, புதிய நிர்வாகிகளை நியமிப்பது, தலைவருக்கு முக்கியமான சில அதிகாரங்களை வழங்குவது, கட்சி விதியில் சில திருத்தங்களை, புதுமைகளை செய்வது உள்ளிட்ட பல விஷயங்கள் இன்றைய கூட்டத்தில் செய்ய உள்ளனர்.

vijay tamilaga vetri kazhagam

கூட்டம் எங்கே நடக்கிறது

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. திருவான்மியூரில் உள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் இந்த குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்காக கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் விழா நடக்கும் இடத்திற்கு வர வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காலை 7.30 மணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்து 2,150 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

மொத்தமாக 15 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி பெண்கள் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு, இந்தி திணிப்பு, நாடாளுமன்ற எம்பிக்கள் எண்ணிக்கை குறைப்பு, டாஸ்மாக் முறைகேடு உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக இன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாம்.

உணவு லிஸ்ட்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கான காலை மற்றும் மதிய உணவு பட்டியல் வெளியாகி உள்ளது. காலை டிபன் 1500 பேருக்கும், மதிய உணவு 2500 பேருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை உணவாக பொங்கல், வடை, சட்னி, சாம்பார், டீ வழங்கப்பட உள்ளது.

வெஜ் மட்டன் பிரியாணி
சாதம்
சைவ மீன் குழம்பு
சாம்பார்
மிளகு ரசம்
உருளை பட்டாணி வறுவல்
தயிர் வடை
அப்பளம்
வெத்தலை பாயாசம்
இறால் 65
இஞ்சி துவையல்
தயிர் பச்சடி
சப்பாத்தி+ பன்னீர் பட்டர் மசாலா
அவியல்
ஆனியன் மணிலா
பகோடா
மோர்
ஐஸ்கிரீம்
மால் பூவா ஸ்வீட்
வெஜ் சூப்
ஊறுகாய்

ஆகிய உணவுகள் வழங்கப்பட உள்ளது. இதில் வழங்கப்படும் சைவ மீன் குழம்பு கவனம் பெற்றுள்ளது. இது வாழைக்காயில் செய்யப்படும் புதிய உணவு ஆகும்.

பல விஷயங்கள் ஆலோசனை

பிரபல முகங்கள் யாரும் கட்சியில் இணையவில்லை. முக்கியமாக இக்கட்சியில் புதிதாக நிர்வாகிகள் யாரும் இணையவில்லை. கமல் கட்சி தொடங்கிய போது மநீமவில் கொத்து கொத்தாக நிர்வாகிகள் பலர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் இணைந்தார். ஆனால் தவெகவில் அப்படி இல்லை. முதல் கட்டமாக தமிழக வெற்றி கழகத்தில் உட்கட்சி பூசல் உள்ளது. மேலே இல்லை என்றாலும் மாவட்ட அளவில் உள்ளூர் அளவில் மோதல் உள்ளது.

உள்ளூர் அளவில் இப்போதுதான் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதை அங்கே இருக்கும்.. பதவி எதிர்பார்த்து காத்திருந்த மற்ற நிர்வாகிகள் ஏற்கவில்லை . இதனால் கொடி ஏற்றுவது தொடங்கி போஸ்டர் அடிப்பது வரை பல மோதல்கள் நடக்கின்றன. ஒரே மாவட்டத்தில் பல விஜய் ரசிகர் குழுக்கள் இருக்கும். மன்றங்கள் ஒன்று என்றாலும் குழுக்களாக இவர்கள் பிரிந்து இருப்பார்கள். இதன் காரணமாகவே இவர்களுக்கு இடையே பதவி பெறுவதில் பூசல் நிலவி வருகிறதாம்.

இதை எல்லாம் இன்று பேசி தீர்க்க உள்ளனர். முக்கியமாக பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+