என் வீட்டுத் தோட்டத்தில்..தொட்டிக்குள் கஞ்சா வளர்த்த புள்ளிங்கோ!கொத்தாக தூக்கிய போலீஸ்! சென்னை ஷாக்!
சென்னை : சென்னை அருகே கத்தியை காட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்டதோடு வீட்டின் தோட்டத்தில் கஞ்சாவை வளர்த்து வந்ததாக இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் விற்பவர்கள் மீதான கடும் நடவடிக்கையை தமிழக காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. 'கஞ்சா ஆபரேசன் 2.O' என்ற பெயரில் அதிரடி வேட்டையை நடத்த தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறையினருக்கும் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் கஞ்சா ஆபரேசன் 2.Oவை தீவிரப்படுத்தி சோதனையையும், கண்காணிப்பையும் காவல்துறையினர் நடத்தி வருவதோடு, நூற்றுக்கணக்கானோரை கைது செய்து வருகின்றனர்.

வழிப்பறி கொள்ளை
இந்த நிலையில் சென்னை எம்ஜிஆர் பாரதிதாசன் தெருவில் மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று கத்தியை காட்டி மிரட்டி அந்த வழியாக செல்லும் மக்களிடம் செல்போன்கள் மற்றும் பணத்தைப் பறித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இளைஞர் கைது
விசாரணையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து 17 வயது சிறுவன் ஒருவனை கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல குற்றவாளியான அபிஷேக் என்பவர் கொள்ளை அடித்த செல்போன்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அங்கு சென்ற போலீசார் அபிஷேக்கை கைது செய்தனர்.

மொட்டை மாடியில் கஞ்சா
அதோடு வீட்டில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்வதற்காக சோதனை செய்தனர். மேலும் அபிஷேக் செல்போனில் கஞ்சா செடி புகைப்படங்கள் இருப்பதையும் போலீசார் பார்த்து அதிர்ச்சிக்குள்ளாயினர். இதை தொடர்ந்து வீட்டின் மொட்டை மாடியில் போலீசார் சோதனை செய்தபோது தண்ணீர் தொட்டியின் அருகே மர்ம செடி இருந்தது.

ஷாக்கான போலீசார்
அதன் அருகே சென்ற பார்த்த போது தொட்டியில் கஞ்சா செடி வளர்ப்பது தெரிய வந்தது. மேலும் கஞ்சா வாங்கி பயன்படுத்திவிட்டு அதில் உள்ள விதைகளை நட்டு செடிகளாக வளர்த்து வந்ததும், அடிக்கடி அந்த செடியை காய வைத்து பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது. இதைஅடுத்து அபிஷேக் மற்றும் அவனது கூட்டாளியான சதீஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் மொட்டை மாடியில் கஞ்சா வளர்த்து வந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications