குவிந்த மக்கள்.. கொட்டும் மழையில் நனைந்தபடி குறைகளை கேட்டறிந்த உதயநிதி ஸ்டாலின்
சென்னை: கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கொரோனாவால் உயிரிழந்த கட்சி தொண்டரின் புகைப்படத்தை திறந்து வைத்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
Recommended Video
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் தொகுதிக்குள் பம்பரமாக சுழன்று வேலை பார்த்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
இந்த நிலையில்தான், அவர் ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் படம் ஒன்றில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கியுள்ளார்.

சூட்டிங் பிரேக்
இதையடுத்து, அவர் தீவிர அரசியலிலிருந்து சில நாட்கள் பிரேக் எடுப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், தனது சூட்டிங் வேலைகளை ஒதுக்கி தள்ளி விட்டு கட்சி தொண்டர் உயிரிழந்த நிகழ்வுக்கு அவர் சென்றதும், கொட்டும் மழையில் அவர் கட்சியினரோடு அந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றதோடு மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்ததும், திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கொரோனாவால் இறந்த கிளைச் செயலாளர்
பூவிருந்தவல்லி ஒன்றியம் பாரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மோகன். திமுக கிளைச் செயலாளரான இவர் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் உயிர் இழந்தார். இதையடுத்து நேற்று அவரது படத்திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்றார்
இதில் திமுக இளைஞரணிச் செயலாளர் எம்.எல்.ஏ உதயநிதி பங்கேற்றார். அப்போது பெரிய அளவுக்கு மழை கொட்டிக் கொண்டிருந்தது. ஆனால், கொட்டும் மழையையும் பொருட்படுத்தவில்லை உதயநிதி. நிகழ்ச்சியை ரத்து செய்யுங்கள் அல்லது நான் பிறகு ஒரு நாள் வருகிறேன் என்றும் சொல்லவில்லை.

கொட்டும் மழையில் உதயநிதி
கொட்டும் மழைக்கு இடையே, அந்த நிகழ்ச்சியில், உதயநிதி கலந்து கொண்டு புகைப்படத்தை திறந்து வைத்து பின்னர் மலர் தூவி மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து 200க்கும் மேற்பட்டோருக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
அதேபோல் கொட்டும் மழையிலும், அங்கே வந்திருந்த பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரிசன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், எம்.எல்.ஏ கிருஷ்ணாசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்












Click it and Unblock the Notifications