"சனாதனம்".. ஆளுநருக்கு போன லெட்டர்.. உதயநிதி ஸ்டாலின் போட்ட ஒற்றை "சிரிப்பு எமோஜி".. ஆ போச்சே!
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஆளுநர் ரவி வழக்கு தொடுக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்ததற்கு, உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். அவருடைய பேச்சு காரணமாக தேசிய அளவில் அவர் விவாதங்களில் ஈடுபட்டு உள்ளார்.

அவர் தமுஎகச சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பில் 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது என்று கடுமையாக கூறினார்.
அதோடு, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.
சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் என்று பேசினார்.
சனாதனம்: சனாதனம் குறித்த அவரின் பேச்சு தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவரின் பேச்சுக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாஜகவினர் பலரும் அவரின் பேச்சால் அரண்டு போய் உள்ளனர். அவருக்கு ஆதரவாகவும் குரல்கள் வர தொடங்கி உள்ளன,
மொத்தத்தில் அவரின் பேச்சு தேசிய அளவில் விவாத பொருளாக மாறி இருக்கிறது. இதையடுத்து தனக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் சொன்ன உதயநிதி ஸ்டாலின், நான் சொன்னதில் உறுதியாக இருக்கிறேன். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்.. பல ஆண்டுகளுக்கு முன்பு மேலாடை அணியக்கூடாது. கோவில்களுக்குச் செல்லக்கூடாது என்றார்கள். இதையெல்லாம் மாற்றியதே திராவிட மாடல். பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டபோது அதை மாற்றியதுதான் திராவிடமாடல். என்ன வழக்குப் போட்டாலும் சந்திப்போம்.
ஒட்டுமொத்த இந்தியாவே சனாதனம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறது. இன்னமும் பேச வேண்டும். நான் முன்பே சொன்னது போல் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது, Genocide என நான் சொன்னதாக சிலர் பேசுகின்றனர். சனாதனம் என்ற கோட்பாட்டை ஒழிக்க வேண்டும் என்று தான் பேசினேன். இனிமேலும் அப்படித்தான் பேசுவேன்.எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.
😂
— Udhay (@Udhaystalin) September 3, 2023
திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள் சிலர். அதற்கு திமுகவினரை எல்லாம் கொலை செய்வதாக அர்த்தமா? பிரதமர் மோடி, 'காங்கிரஸ் இல்லாத பாரதம்' என்கிறார். அப்படி என்றால் காங்கிரஸ்காரர்களை பிடித்து கொல்லப்போகிறார்களா?. பாஜக பொய்யான செய்திகளை பரப்புவதில் பிரபலமானவர்கள். அதைத்தான் செய்கிறார்கள், என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்.
சிரித்த அமைச்சர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஆளுநர் ரவி வழக்கு தொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த பாஜகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் செய்துள்ள போஸ்டில், 153, 153A, 295, 295A, 296, 298, 499, 504, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் உதயநிதி மீது வழக்கு தொடுக்க அனுமதி கேட்டு ஆளுநர். ஆர். என் ரவிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இதற்கு உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் செயலியில் சிரித்தபடி எமோஜி போட்டு பதிலடி கொடுத்துள்ளார். அவரின் இந்த ஒற்றை எமோஜி தற்போது மீண்டும் டிரெண்டாகி வருகிறது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications