அரசியல் பழிவாங்கல்.. பாசிச போக்கு.. மத்திய அரசு சட்டத்திற்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் கடும் சீற்றம்
சென்னை: தணிக்கையான படங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் மறு தணிக்கை செய்ய வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கலுக்கு வழிவகுக்கும். இந்த பாசிச போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டும் பிப்ரவரி 12ல், ராஜ்யசபாவில் ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும் திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்க வகை செய்யப்பட்டு உள்ளது.

கருத்து சுதந்திரம்
இதனையடுத்து "ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021" பொதுமக்கள் கருத்திற்காக மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இது ஜூலை 2 வரை பொதுமக்களின் பார்வைக்காக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த சட்டத்திருத்தம் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்தை முடக்கிவிடும் என்று, சினிமா துறையை சார்ந்தவர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

சூர்யா எதிர்ப்பு
ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் "சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக, அதன் குரல் வளையை நெறிப்பதற்காக அல்ல. இன்றுதான் கடைசி நாள். உங்கள் ஆட்சேபணையைத் தெரிவியுங்கள்" என்றுதெரிவித்தார்.

திரைத்துறையிலிருந்து வந்தவர்
இதைவிட காட்டமாக உதயநிதி ஸ்டாலின் இந்த சட்ட மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர் உதயநிதி. தற்போது, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார். இந்த நிலையில்தான், மத்திய அரசின் இந்த சட்ட மசோதாவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அவர்.
|
கடும் கண்டனம்
உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021' படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிக்கிறது. தணிக்கையான படங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் மறு தணிக்கை செய்ய வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கலுக்கு வழிவகுக்கும். இந்த பாசிச போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications