தொகுதிக்கு லீவு.. அரசியலில் இருந்து சின்ன பிரேக் எடுக்கும் உதயநிதி ஸ்டாலின்.. சூட்டிங்கில் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றது முதல் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் பம்பரமாக சுழன்று மக்கள் பணியாற்றி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

Recommended Video

    அடுத்த படத்திற்கு தயாராகும் Udhayanidhi Stalin ? அரசியலில் இருந்து குட்டி Break !

    பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இருக்கும் பொது கழிப்பிடம் சுத்தமாக இருக்கிறதா என்பதில் ஆரம்பித்து, மெரினா கடற்கரையில் உள்ள குதிரைகள் பசியாறியதா என்பது வரை பார்த்து பார்த்து தொகுதியில் வேலை செய்து கொண்டு இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

    இதனால் மிகக்குறுகிய காலத்திலேயே தொகுதி மக்கள் ஒவ்வொருவருக்கும் பரிச்சயமாகி விட்டார் உதயநிதி ஸ்டாலின், மற்றும் கட்சி சார்பு இல்லாமல் அனைத்து தரப்புமே அவரது பணிகளை பாராட்டுகின்றது.

    உதயநிதி ஸ்டாலின் பிரேக்

    உதயநிதி ஸ்டாலின் பிரேக்

    இந்த நிலையில்தான் அரசியலில் இருந்து ஒரு சின்ன பிரேக் எடுக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் மகிழ்திருமேனி எடுத்து வரும் ஒரு திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கிறார். இதன் காரணமாகத்தான் அரசியலில் இருந்து ஒரு சின்ன பிரேக் எடுத்துக் கொண்டு அவர் ஷூட்டிங் செல்ல இருக்கிறார் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சூட்டிங் தொடங்கியது

    சூட்டிங் தொடங்கியது

    சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் கடந்த டிசம்பர் மாதமே, இந்த திரைப்படத்துக்கான பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் பிஸியாக இருந்த காரணமாகவோ என்னவோ தெரியவில்லை, இந்த படத்தின் சூட்டிங் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தற்போது மறுபடியும் படத்தின் பணிகள் ஆரம்பித்துள்ளன. எனவே ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி இந்த படத்தை முடித்து கொடுப்பதற்கு உதயநிதி ஸ்டாலின் தயாராகிவிட்டார். ரெட்ஜயண்ட் மூவீஸ்தான் இந்த படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    நிதி அகர்வால் ஜோடி

    நிதி அகர்வால் ஜோடி

    சிலம்பரசனுடன் ஈஸ்வரன் என்ற படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார் அல்லவா நிதி அகர்வால், அவர்தான் இந்த திரைப்படத்திலும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்கிறார். பூமி என்ற ஜெயம் ரவி நடித்த திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். மதன் கார்க்கி இந்த படத்துக்கு பாடல்கள் எழுதியுள்ளார். அரோள் கொரோலி இசையமைத்துள்ளார்.

    சின்ன லீவு

    சின்ன லீவு

    சென்னையில் வைத்து சூட்டிங் நடைபெற உள்ளது . இருப்பினும் ஒரு சில காட்சிகளை மட்டும் தமிழ்நாட்டின் வேறு சில பகுதிகளிலும் வைத்து படம் பிடிக்க படலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இதனால் தொகுதிக்கு ஒரு சில நாட்கள் அவர் பிரேக் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை வரும்.

    தீவிர பிரச்சாரங்கள்

    தீவிர பிரச்சாரங்கள்

    தேர்தல் நேரத்தில், தமிழ்நாடு முழுக்க, தீவிரமான அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார் உதயநிதி ஸ்டாலின். இதன் பிறகு தொகுதி மக்களுக்கு தேவையான பணிகளை செய்வதில் பிஸியாக இருந்தார். இந்த ஷூட்டிங் அவர் ஏற்கனவே ஒப்புக் கொண்டது என்பதோடு மட்டுமில்லாமல் இந்த பரபரப்பில் இருந்து சில காலங்களுக்கு சின்னதாக ஒரு பிரேக் எடுத்துக்கொண்டு, உற்சாகமாக பழையபடி தொகுதிக்கு திரும்ப உதவும் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

    நடிப்புக்கு முழுக்கு இல்லை

    நடிப்புக்கு முழுக்கு இல்லை

    இந்த திரைப்படத்தோடு உதயநிதி ஸ்டாலின் கலை உலகத்துக்கு முழுக்கு போட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறுவாரா என்றால் இல்லை. சமுதாய விழிப்புணர்வு சார்ந்த திரைப்படங்களில் அவர் தொடர்ந்து நடிப்பார் என்று கூறப்படுகிறது. பாலிவுட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய "ஆர்டிகள் 15" திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளதாகவும், அருண்ராஜா காமராஜ் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூட்டிங் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+