உ.பி. தேர்தலில் பாஜகவுக்கு பெரும் சவாலாக மாறி நிற்கும் அகிலேஷின் திராவிட மாடல் அரசியல் !
சென்னை: உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் இந்துத்துவா கோட்பாட்டை முன்வைக்கும் பாஜகவுக்கு ஆகப் பெரும் சவாலாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் திராவிட மாடல் அரசியல் விளங்குகிறது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை க.ராசேந்திரன் இன்று வெளியிட்ட அறிக்கை:
ஜனவரி 19,2022 அன்று வெளிவந்த இந்து ஆங்கில நாளேட்டில், உர்மினிஷ் என்ற பத்திரிக்கையாளரின் கட்டுரை- தமிழ்நாட்டின் 'திராவிடன் மாடல்' உபியில் பாஜக வின் இந்துத்துவ அரசியலுக்கு கடும் நெருக்கடிகளை உருவாக்கி இருப்பதை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. கட்டுரையாளர் மாநிலங்களவை தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியவர்.

உ.பி. களத்தில் சமூக நீதி
அடுத்த பிரதமர் பதவிக்கு RSS தயார் செய்யும் ஆதித்யநாத் உபி முதல்வராக படு தோல்வியை சந்தித்திருக்கிறார் என்றும் இஸ்லாமியர்களை எதிரிகளாக்கி இந்துக்களை அணி திரட்டும் இந்துத்துவா வலையில் வீழ்வதற்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தலைவர்களும் குறிப்பாக இளைஞர்களும் தயாராக இல்லை. அவர்கள் சமூக நீதி கோட்பாட்டை பேசத் தொடங்கி விட்டார்கள் என்றும் அவர் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.

ஓபிசி தலைவர்கள்
உபி மாநிலம் சட்ட மன்றத் தேர்தலை எதிர் கொள்ளும் நிலையில் அமைச்சரவையில் இருந்து பிற்படுத்தப்பட்ட அமைச்சர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் விலகி வருகிறார்கள். மண்டல் சமூக அரசியலிலிருந்து 'கமண்டல்' என்ற இந்துத்துவ அரசியலுக்கு உபியை மாற்ற முயன்றது பாஜகவும் RSS ம் ஆனால் கடந்த 5 அல்லது 7 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இந்துத்துவ அரசியலில் ஆர்வம் காட்டாமல் அதிலிந்து விலகி தங்கள் சமூகத்திற்கான கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்வுரிமை, முன்னேற்றம் ஆகியவற்றில் தீவிரம் காட்டி வருகிறார்கள். பாஜக ஆட்சி இவற்றைப் பற்றிக் கவலைப்படாது. வகுப்புவாத அரசியலுக்கு மட்டுமே முன்னுரிமை தருவதை அவர்கள் இப்போது உணரத் தொடங்கிவிட்டனர் என்று சுட்டிக்காட்டுகிறார் கட்டுரையாளர்.

27% இடஒதுக்கீடும் முதல்வர் ஸ்டாலினும்
பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவ உயர் பட்டப்படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க மறுத்த பாஜக ஆட்சி முன்னேறிய ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டில் துடிப்புடன் செயல்பட்டதும், விவசாயிகளின் போராட்டத்தை அலட்சியப்படுத்தியதும், மோடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தலைவர் என்ற பிம்பத்தை குலைத்துவிட்டது என்றும் கூறுகிறது அக்கட்டுரை. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தொடர்ந்த வழக்கின் வழியாக மருத்துவ உயர்கல்வியில் அனைவருக்கும் 27% இட ஒதுக்கீடு கிடைத்ததை சமூக வலைதளங்களில் உபி,பீகாரில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டு வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டனர். (in this case the efforts of a regional party DMK in Tamilnadu to restore reservation has drawn applause from among backward communities in UP and Bihar. Social Media has been flooded with complementary messages for tamilnadu chief minister m.k.Stalin)
Recommended Video

இந்தி பேசும் கிராமங்களில் பெரியார்
கடந்த சில ஆண்டுகளாக, ஒரு சில படித்த அறிஞர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த நாராயண குரு, அய்யங்காளி, பெரியார், சாகு மகராஜ், ஜோதி ராவ் பூலே மற்றும் சமூக சீர்திருத்த தலைவர்களின் பெயர்கள் அவர்களது கருத்துகள் இப்போது இந்தி பேசும் ஒவ்வொரு கிராமங்களிலும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. சமூக ஊடகங்களில் இளைஞர்களின் பதிவுகள் தான் இதற்கு மிகப்பெரும் தூண்டுதல் சக்தியாக அமைந்திருக்கிறது. என்பதை பல்வேறு தரவுகளுடன் விருவியிருக்கிறது அந்த கட்டுரை. தமிழ்நாட்டின் திராவிட மாடல் உபியில் பாஜக இந்துத்துவாவிற்கு நெருக்கடியை உண்டாக்கி இருப்பதை மையமாக வைத்து இந்தக் கட்டுரை இப்படி ஏராளமான செய்திகளை பதிவிட்டு இருக்கிறது. இவ்வாறு விடுதலை ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications