சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறுநீரில் இருந்து பீர்.. விவேக் சொன்ன மாதிரி தனி ருசியா இருக்குமோ..குடிச்சுப்பாருங்க

சிங்கப்பூர் மதுபான ஆலை ஒன்று சிறுநீர் மற்றும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பீர் தயாரித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் விவேக் ஒரு படத்தில் அவசரத்திற்கு பீர் பாட்டிலில் சிறுநீர் கழித்திருப்பார். அதை உண்மையான பீர் என்று நினைத்து குடித்த டிராபிக் போலீஸ் நல்ல சுவையாக இருக்கிறதே இன்னொரு பாட்டில் கிடைக்குமா என்று கேட்பார். அது நகைக்சுவைக்காக எடுக்கப்பட்ட காட்சிதான் என்றாலும் நிஜமாகவே சிறுநீரை சுத்திகரிப்பு செய்து சுவையான பீர் தயாரித்துள்ளது சிங்கப்பூர் மதுபான நிறுவனம்.

Recommended Video

    சிறுநீரில் இருந்து பீர்.. விவேக் சொன்ன மாதிரி தனி ருசியா இருக்குமோ..குடிச்சுப்பாருங்க

    இது நகைச்சுவை அல்ல! உண்மையிலேயே NEWBrew என்கிற நிறுவனம் கழிவுநீரிலிருந்து மறுசுழற்சி செய்யப்பட்டு, சிங்கப்பூரின் நீர் விநியோகத்தில் வடிகட்டப்பட்ட தண்ணீரிலிருந்து பீரை தயாரிக்கிறது. இதனை பசுமையான பீர் என்று அந்த நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது.

    சிங்கப்பூர் நாட்டில் நீல புரட்சி என்ற பெயரில் நீர் மேலாண்மை மேற்கொள்ள அந்நாட்டு அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நீர் மேலாண்மை அந்நாட்டின் அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், மறுசுழற்சி செய்யப்பட்ட நீரைக் கொண்டு அந்நாட்டின் நீர் தேவை 40 சதவீதம் அரசு பூர்த்தி செய்து வருகிறது. இந்த எண்ணிக்கை 2060இல் 55 சதவீதமாக உயரும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    இதான் 360 டிகிரி.. ரொம்ப பேசிக் இதெல்லாம்! அண்ணாமலைக்கு இதான் 360 டிகிரி.. ரொம்ப பேசிக் இதெல்லாம்! அண்ணாமலைக்கு

    இது புதுவகை பீர்

    இது புதுவகை பீர்

    பீர் தயாரிப்பில் புதுமை புகுத்த வேண்டும் என்ற நோக்கில் 'Newbrew' என்ற புதிய பிராண்டை உருவாக்கியுள்ளது. இந்த பிராண்டின் பெயர், தோற்றம் மற்றும் ருசியில் புதுமை இல்லை. இதன் தயாரிப்பும் சற்று தனித்துவம் புதுமையும் கொண்டதாகும்.

    சிங்கப்பூரில் தண்ணீர் மேலாண்மை

    சிங்கப்பூரில் தண்ணீர் மேலாண்மை

    சிங்கப்பூர் நாட்டில் நீண்ட காலமாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதை எதிர்கொள்ள பல்வேறு யுக்திகளையும், விழிப்புணர்வு செயல்பாடுகளையும் அந்நாட்டின் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாகவே, இந்த 'NEWater' பிராண்டை உருவாக்கியுள்ளது.

    தூய்மையான பீர்

    தூய்மையான பீர்

    இந்த பீர் ஆனது, Newater எனப்படும் நீரைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த நீர் கழிவு மற்றும் சிறுநீரில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட உயர் தரம் வாய்ந்த தண்ணீராகும். இந்த புதிய பிராண்டின் 95 சதவீத தயாரிப்புகள் இந்த NEWater நீரில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இது சர்வதேச பாதுகாப்பு தரத்துடன் கூடியதாகவும், பீர் தயாரிப்புக்கு ஏற்ப தூய்மையானதாகவும் உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மறுசுழற்சி முறை

    மறுசுழற்சி முறை

    உலகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், பீர் தயாரிப்பதற்கு நிறையத் தண்ணீர் தேவைப்படுவதாலும், 90 சதவீத பானத்தில் H20 இருப்பதாலும், அதற்கு மாற்றாக இந்த மறுசுழற்சி முறையை அந்நிறுவனம் கடைப்பிடித்திருக்கிறது. இந்த மறுசுழற்சி பீர் குடிப்பதற்கு உகந்ததாக இருக்கிறதா என்பதை நிரூபிக்கப் பல சோதனைகள் நடத்தப்பட்டிருக்கிறது. 95 சதவீதம் Tropical Blonde Ale சுத்திகரிக்கப்பட்டு அதி சுத்தமான நீராக மாற்றுகிறது.

    தயாராகும் பீர்

    தயாராகும் பீர்

    இந்த பீர் தயாரிப்பு பற்றி அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இந்த நீரைக் கொண்டு பீர் தயாரிக்கும் போது சுவைக்காக தேன், பார்லி மால்ட், யீஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. சிங்கப்பூர் கால நிலைக்கு ஏற்றதாக இருக்கிறது என்று கூறுகின்றனர் இந்த பீரை சுவைத்தவர்கள்.

    ருசி எப்படி

    ருசி எப்படி

    இந்த நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரில் பீர் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. கழிவுகளை கொண்டு பீர்களை தயாரிப்பது இது முதல் முறை அல்ல. அந்நாட்டில் இதுபோன்ற பல புதிய முயற்சிகள் விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிங்கப்பூரின் சிறப்பு, கிராஃப்ட் பீர் நிறுவனம், இந்த பீர் வறுக்கப்பட்ட தேன் போன்ற சுவை கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. பீர் பிரியர்கள் இந்த புதுவகை நீரில் தயாரிக்கப்பட்ட பீரை சுவைத்து விட்டு ருசி சும்மா அள்ளுதே என்று கூறுகின்றனர். நம்ம ஊர் ஜில் பீர் பிரியர்கள் என்ன சொல்லப்போகிறார்களோ? பார்க்கலாம்.

    English summary
    The Singapore Liquor Company has developed a delicious beer that purifies urine. Beer brewing requires high quality water and NEWBrew is testament that NEWater is perfectly clean and safe for drinking, and can be used to make a great tasting beer!Curious about what NEWBrew tastes like and how it’s produced?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X