சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

களமிறங்கும் பிடன்.. சர்வதேச நாடுகளுக்கு 8 கோடி வேக்சின் டோஸ்களை அனுப்ப முடிவு.. அமெரிக்கா திட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: சர்வதேச நாடுகளுக்கு மொத்தமாக 8 கோடி வேக்சின் டோஸ்களை ஏற்றுமதி செய்யும் முடிவை அமெரிக்க அதிபர் பிடன் எடுத்துள்ளார்.

உலக அளவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இரண்டாம் அலையும், சில குட்டி நாடுகளிலும் மூன்றாம் அலையும் ஏற்பட தொடங்கி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சர்வதேச நாடுகள் பல வேக்சின் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் இனி கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை தேவை இல்லை- மத்திய அரசு இந்தியாவில் இனி கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை தேவை இல்லை- மத்திய அரசு

இந்தியாவிலும், ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள பல ஏழை நாடுகளிலும் போதிய வேக்சின் இல்லாமல் அந்நாட்டு அரசுகள் திணறி வருகின்றன. பணக்கார நாடுகள் இந்த வேக்சின்களை முன்பே ஆர்டர் செய்துவிட்டதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உதாரணம்

உதாரணம்

உதாரணமாக அமெரிக்கா தனது நாட்டில் மாடர்னா, பைசர், ஜான்சனன் ஜான்சன் உள்ளிட்ட வேக்சின் ஆராய்ச்சிக்கு நிதி அளித்தது. இந்த நிதியை தரும் போதே, எங்களுக்கு இவ்வளவு வேக்சின்களை கொடுக்க வேண்டும், அதன்பின்தான் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. கணக்குப்படி அமெரிக்கா தனது தேவையை விட கூடுதலாகவே வேக்சின்களை முன்கூட்டியே ஆர்டர் செய்துள்ளது.

மற்ற நாடுகள்

மற்ற நாடுகள்

அமெரிக்கா மட்டுமின்றி பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற பெரிய நாடுகள் பல இதேபோன்று முன்கூட்டியே வேக்சின்களை ஆர்டர் செய்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் ஏழை நாடுகள், வளரும் நாடுகள் பல தங்களுக்கு போதிய வேக்சின் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறது. இதற்காக உலக சுகாதார மையம், செபி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் சென்ற்து கோவாக்ஸ் (COVAX -- COVID-19 Vaccines Global Access) என்ற அமைப்பை உருவாக்கியது.

என்ன செய்யும்

என்ன செய்யும்

ஏழை நாடுகள், வளரும் நாடுகளுக்கும் வேக்சின் கிடைக்கும் வகையில் பணக்கார நாடுகளிடம் இருந்து நிதி பெற்று, அதை வைத்து குறைந்த விலையில் வேக்சின் வாங்கி ஏழை நாடுகளுக்கு அளிக்கும் திட்டம்தான் இந்த கோவாக்ஸ். ஆனால் இதன் மூலம் பெரிய அளவில் வளரும் நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் வேக்சின் கிடைக்கவில்லை. இது சர்வதேச அளவில் வளர்ந்த நாடாக, பிக்பாஸாக பார்க்கப்படும் அமெரிக்காவிற்கு தார்மீக ரீதியாக அழுத்தம் கொடுத்தது.

அழுத்தம்

அழுத்தம்

வளர்ந்த நாடுகளுக்கு அமெரிக்கா உதவவில்லை, வேக்சின்களை வாங்கி குவித்துவிட்டது என்று அமெரிக்காவிற்கு தார்மீக ரீதியாக பல வல்லுநர்கள், விமர்சகர்கள் அழுத்தம் கொடுத்தனர். இந்த நிலையில் தற்போது உலக நாடுகளுக்கு 8 கோடி டோஸ் கொரோனா வேக்சின்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

வேக்சின்

வேக்சின்

இதில் 2 கோடி டோஸ் வேக்சின் அமெரிக்கா ஏற்கனவே தங்கள் நாட்டில் அனுமதித்துள்ள பைசர், மாடர்னா, ஜான்சனன் ஜான்சன் வேக்சின் ஆகும். முதல்முறையாக இந்த வேக்சின்கள் அமெரிக்காவில் இருந்து அரசு மூலமாக பிற நாடுகளுக்கு செல்கிறது. இது போக அமெரிக்காவில் அனுமதிக்கப்படாமல் ஆனால் அந்த நாட்டால் ஆர்டர் செய்யப்பட்டுள்ள 6 கோடி ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா வேக்சின் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

பிடன்

பிடன்

இதற்கான அறிவிப்பை அதிபர் பிடன் நேற்று வெளியிட்டு இருந்தார். 45 லட்சம் ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனக வேக்சின் ஏற்கனவே மெக்சிகோ, கனடாவிற்கு அமெரிக்கா மூலம் வழங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளுக்கு வேக்சின் வழங்கும் லீடர் பொறுப்பை இப்போதுதான் அமெரிக்கா கையில் எடுத்துள்ளது.

இரண்டு டோஸ்

இரண்டு டோஸ்

அமெரிக்காவில் ஜூன் முதல் வாரத்திற்குள் 160 மில்லியன் மக்களுக்கு முழுமையாக இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போது மற்ற நாடுகளுக்கு வேக்சின் கொடுக்க அமெரிக்கா முன் வந்துள்ளது. ஆனால் இது எந்த நாடுகளுக்கு, எவ்வளவு அனுப்பப்படும், எப்போது அனுப்பப்படும் என்று விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

English summary
USA plans to give 80 Million Corona Vaccines shots to other countries orders President Joe Biden.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X