விவசாயிகளுக்கு குட்நியூஸ்.. வாடகைக்கு வேளாண் இயந்திரங்கள்.. தமிழக அரசின் சர்ப்ரைஸ்.. வாவ் உழவன் செயலி
சென்னை: வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு தேவையா? விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. உழவன் செயலி என்றால் என்ன தெரியுமா?
தமிழகத்தை பொறுத்தவரை, வேளாண் துறையில், தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வேளாண் கருவிகள்: குறிப்பாக, விதைப்பு முதல் அறுவடை முடிய அனைத்து சாகுபடி பணிகளையும் வேளாண் இயந்திரங்கள் மூலமாக மேற்கொள்வதற்காக முனைப்பு காட்டி வருகிறது என்றாலும், ஏராளமான விவசாயிகளுக்கு சொந்தமாக வேளாண் கருவிகள் கிடையாது.
எனவேதான், வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் தங்களுடைய வீட்டிலிருந்தபடியே, ஆன்லைனில் ரிசர்வ் செய்துகொள்ளும் "இ-வாடகை" என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.. இதன்மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்பட உள்ளன.
உழவன் செயலி: இதுபோலவே, தமிழக அரசு கொண்டுவந்த இன்னொரு திட்டம் உழவன் செயலி .. கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் 9 முக்கிய சேவைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலி புதுப்பிக்கப்பட்டு, தற்போது 22 வகையான சேவைகளை வழங்கி வருகிறது.. இப்போது, அனைத்து விவசாயிகளிடமும் செல்போன் உள்ளதால், வேளாண்மை தொடர்பான பல்வேறு தகவல்களை கைபேசி மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது தான் இந்த உழவன் செயலி.
உழவன் செயலியின் நோக்கம் : பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், வானிலை முன்னறிவிப்பு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மானிய திட்டங்கள், விளைச்சல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் போன்று பல்வேறு இடங்களுக்கு சென்று தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களையும் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதற்கான வழிமுறைகளையும் விவசாயிகளின் செல்போன் மூலமாக வழங்குவதே இந்த உழவன் செயலியின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிலையில், கூட்டுறவு சங்கம் சார்பில் அடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. அதாவது, தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வருவாய் ஈட்டுவதற்காக, மத்திய அரசின் நிதி உதவியின் கீழ், பல்வேறு தொழில்களை செய்யும் சங்கங்களாக மாற்றப்பட்டு வருகிறது. இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், மண்டல இணை பதிவாளர்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியிருக்கிறார். அதில் உள்ளதாவது:
உழவு கருவிகள்: வேளாண் இயந்திரங்களை, "உழவன்" செயலி வாயிலாக வாடகைக்கு விட ஏதுவாக கூட்டுறவு சங்கங்களில் இப்போது பயன்பாட்டிலுள்ள உழவு கருவிகள், இயந்திரங்கள் சேர்க்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. "இ - வாடகை" செயலி வாயிலாக இயந்திரங்களை வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
வேளாண் இயந்திரங்கள் பயன்படாத நேரத்தை குறைத்து, அதிக அளவில் வாடகைக்கு விட, உழவன்/ இ - வாடகை செயலியில் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமின்றி, நேரடியாக அணுகுவோருக்கும் வாடகைக்கு விடலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications