Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vaikasi Matha Rasi Palan 2020: வைகாசி மாதம் இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அற்புதமாக இருக்கும்

வைகாசி மாதம் சூரியன் ரிஷபம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ரிஷபம் மாதத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூரியன் ரிஷபராசியில் நுழையும் மாதம் வைகாசி மாதமாகும். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் சொந்த வீடு சிம்ம ராசி. பத்தாம் வீடு என்பது தொழிலைக் குறிக்கும். சூரியன் தனது சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய ரிஷபத்தில் அதாவது, தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலமே வைகாசி மாதம். இந்த மாதத்தில் மேஷம் முதல் கன்னி ராசி வரைக்கும் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

வைகாசி மாதம் சூரியன் ரிஷபம் ராசியில் புதனோடு சஞ்சரிக்கிறார். இந்த மாதம் சுக்கிரன் ரிஷபம் ராசியிலும் மிதுனம் ராசியில் ராகு, தனுசு ராசியில் கேது, மகரம் ராசியில் சனி, குரு, கும்பம் ராசியில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. அக்னி நட்சத்திர காலத்தில் அனல் அடித்தாலும் வசந்த கால காற்று மனதில் உற்சாகத்தை தரும். வைகாசி மாதம் கிரகங்களின் ராசி மாற்றத்தை பார்த்தால் வைகாசி 1 ஆம் தேதி குரு வக்ர ஆரம்பமாகிறது. வைகாசி 11ஆம் தேதி ரிஷபம் ராசியில் இருந்து புதன் மிதுனம் ராசிக்கு சென்று ஆட்சி பெற்று அமர்கிறார்.

வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்றும், வைசாகம் என்றும் அழைப்பார்கள். வேதம், புராணம் ஆகியவை போற்றுகின்ற மாதம் வைகாசி! பூமியில் படுத்துறங்குதல், பிரம்மச்சரியம், விழிப்புடன் இருத்தல் ஆகிய மூன்றும் வைகாசி மாதத்தின் "மாதவம்' என்றும் வடமொழி நூல்கள் கூறுகின்றன. ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய இம்மாதத்தில் குளிர்ந்த தண்ணீரில் நீராடல் பூரணத்வமானது என விஷ்ணு ஸ்மிருதி சிறப்பாகக் கூறுகிறது. சிறப்பான இந்த மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த மாதம் வாக்கில் சூரியன் இருப்பதால் கவனமாக பேசவும். கோபமான பேச்சுக்களை தவிர்த்திடுங்க. குடும்பத்தில் சில குழப்பங்கள் வரும் விட்டுக்கொடுத்து போகணும். இருக்கிற சூழ்நிலைக்கு தகுந்து அனுசரித்து போக வேண்டும். சுப காரிய முயற்சிகளில் சின்னச் சின்ன தடைகள் வரலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. பெரிய அளவில் முதலீடு எதுவும் செய்யாதீங்க. வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். லாபமும் வரும். வேலை செய்பவர்கள் உங்க வேலையில கவனமாக இருங்க. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. வைகாசி மாதம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த மாதம். அம்மன் வழிபடு மனக்கவலைகளை போக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வைகாசி மாதம் வசந்தங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். பணம் வருவதில் இருந்த தடைகள் விலகும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை செய்யலாம். பூர்வீக சொத்துப்பிரச்சினையில் இருந்த வழக்குகள் நீங்கும். இந்த மாதம் வீடு மனை வாங்கலாம். பணம் கொடுக்கல் வாங்கல் நன்மையில் முடியும். கொடுத்த கடன்கள் வசூலாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் செய்த முதலீடு செய்யலாம். எதிரிகள் தொல்லை நீங்கும் மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசு வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடுங்கள் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுனம்

புதனை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே எல்லா விசயத்திலும் கவனமாக இருங்க. நேரம் விரையம் பண விரையம் ஏற்படலாம். பணத்தை சிக்கனமாக செலவு பண்ணுங்க. கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும் மருத்துவ செலவுகளும் வரும் கவனமாக இருங்க. ஊரடங்கு நெருக்கடியான கால கட்டத்தில் இருப்பதால் பணத்தை சிக்கனமாக செலவு பண்ணுங்க. தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் லாபம் கிடைக்காது நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு கொடுத்த வேலைகளை சிறப்பாக செய்வீங்க. வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.

கடகம்

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே உங்களுக்கு பொருளாதாரரீதியான முன்னேற்றம் ஏற்படும். நீங்க செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் அதிகமாக நடைபெறும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வேலை விசயமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு இடமாற்றமும் வேலையில் பதவி உயர்வும் தேடி வரும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு உங்க திறமைகள் பளிச்சிடும்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இந்த மாதம் சொத்துக்களை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கலாம். உங்களுக்கு நிதி நிலைமை சிக்கலாக இருந்தாலும் படிப்படியாக சீரடையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையலாம் கவனமாக பேசுங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. புதிய முதலீடுகளை செய்யாதீங்க. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வேலை செய்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி

கன்னி

புதனை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த மாதம் நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும். சுப காரியம் நடைபெறுவதில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். கருத்து வேறுபாடுகள் மறையும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். உங்க ஆரோக்கியம் இந்த மாதம் அற்புதமாக இருக்கும். நீங்க எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன் பார்க்க பேச்சுவார்த்தை நடத்தலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+