வைகோவிற்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு இன்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதிமுக பொதுச்செயலாளராக வைகோ உள்ளார். இவருக்கு வயது 81. வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது வைகோவிற்கு உடல்நல பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் இன்று மீண்டும் வைகோவிற்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து உடனடியாக வைகோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வைகோவின் உடல்நலனை டாக்டர்கள் குழு கவனித்து வருகிறது.
முன்னதாக இன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க வைகோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. திராவிடர் கழக தலைவர் கி வீரமணி தலைமையில் இன்று நடந்து வரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழாவில் வைகோ கலந்து கொள்ள தயாராகி வந்தார். ஆனால் அதற்கு முன்பாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அந்த விழாவில் பங்கேற்பதை ரத்து செய்துள்ளார். தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ள வைகோ உடனடியாக குணமாகி வீடு திரும்புவார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications