அடையாளம் ஏராளம்.. ஆளெங்க? பேரெங்க? கும்பி எரியுதடி கொந்தளிக்கும் எம்மனசில்.. வைரமுத்து பாடல் வீடியோ
சென்னை: கவிஞர் வைரமுத்து இன்று அடையாளம் ஏராளம்.. ஆளெங்க? பேரெங்க? ஒரு பாடல் வீடியோவை யூடியூபில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ குறித்து வைரமுத்து, "கல்யாணப் புடவையில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே தன் காதல் நினைவுகளைக் கடந்து போகிறாள் கல்யாணப் பெண் ஒருத்தி. காதலர்களின் பழைய காதல் அடையாளங்கள் வழியெல்லாம் வலம் வருகின்றன" என்று கூறியுள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் திட்டத்தின் கீழ் 100 இசையமைப்பாளர்கள் - 100 பாடகர்கள் - 100 இயக்குநர்கள் மூலம் வெவ்வேறு உள்ளடக்கங்களில் உலகத்தின் எல்லாப் பொருள் குறித்தும் பாடல்களை உருவாக்கி வருகிறார். அந்த வீயோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டும் வருகிறார்
அப்படி வெளியான பாடல்கள் தொடார்ந்து வரவேற்பை பெற்று வருகின்றன.

வைரமுத்து இன்று வெளியிட்டுள்ள பாடல் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?
கும்பி எரியுதடி
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதடி
தோணுதடி பழையகதை
அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?
கும்பி எரியுதய்யா
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதய்யா
தோணுதய்யா பழையகதை
*
மின்னல் வெட்டும் ராத்திரியில்
சன்னல் பக்கம் நீஅழைக்க
அந்நேரம் பாத்து
அஞ்சாறு நாய் கொலைக்க
வெறிச்சோடிப் போயிருந்த
வீதியில நான்விழுந்து
தெறிச்சோடிப் போனதுக்குத்
தெருவிளக்கு அடையாளம்
சொட்டாங்கல்லு ஒண்ணு - எந்
தொடைப்பக்கம் தவறிவிழ
கல்லெடுக்கும் சாக்குல நீ
கள்ளத்தனம் பண்ண
ஆடி விழுந்ததுக்கும்
ஆளவிடு சாமியின்னு
ஓடி ஒளிஞ்சதுக்கும்
ஓடைக்கரை அடையாளம்
*
சீலகட்டத் தெரியாத
சிறுமியின்னு பாக்காம
வேளகெட்ட வேளையில
வெறிகொண்டு நீயணைக்க
மாமான்னு மிரண்டதுக்கும்
மணமாலை கேட்டதுக்கு
ஆமான்னு சொன்னதுக்கும்
அம்மன்கோயில் அடையாளம்
ஊருக்கே தெரியாம
யாருக்கோ பெண்டாகிக்
குதிரைவண்டி ஏறிக்
கொடிக்கால் கடக்கையில
மடிவிழுந்த கண்ணீரு
மழையாகிப் போனதுக்கு
இடிவிழுந்த ஆலமரம்
இன்னைக்கும் அடையாளம்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications