ஈபிஎஸ் முகத்தை பார்த்தீங்களா.. ‘இன்னும் ஒரே வாரத்தில் பாருங்க..’ - வைத்திலிங்கம் சொன்ன சீக்ரெட்!
சென்னை : ஈபிஎஸ் வராமல் போனால் போகட்டும், தொண்டர்கள் ஓபிஎஸ்ஸை தேடி வருகிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் வர உள்ளார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் அணியில் இருந்த நிர்வாகிகள் சிலர் ஓபிஎஸ் தரப்பிற்குத் தாவியுள்ளனர்.
இதனால், ஓபிஎஸ் தரப்பின் பலம் கூடி வரும் நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் தங்கள் பக்கம் வர இருப்பதாக வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
இருதரப்பும் இணைந்து செயல்பட்டு, பொதுக்குழுவை நடத்துமாறு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், மோதலும், அணி மாறல் நிகழ்வுகளும் இன்னும் தொடர்ந்து வருவது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஈபிஎஸ் சூழ்ச்சியை சொல்லவில்லை
இந்நிலையில் தஞ்சையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம், "நேற்றைய ஓபிஎஸ் பேட்டி மக்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கிறது. ஈபிஎஸ்ஸின் சூழ்ச்சிகளையும், நயவஞ்சகத்தையும் தெரிவிக்காமல், பெருந்தன்மையாக ‘நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.. இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.. மனக் கசப்புகளை மறந்து செயல்படுவோம், அதிமுகவை வலுவான இயக்கமாக கொண்டு வருவோம் என முன்னிறுத்தி அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ்.

தொண்டர்கள் ஏற்கவில்லை
அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமி கொடுத்த அறிக்கையை மக்களும், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. நேற்றைய தினமே ஈபிஎஸ் பக்கம் இருந்த வேடசந்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் ஓபிஸ்ஸை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.

இன்னும் ஒரே வாரத்தில்
இப்படி தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களை நோக்கி வர இருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் அதை நீங்கள் பார்ப்பீர்கள்.
ஈபிஎஸ் மேல்முறையீடு செய்திருக்கிறார். அந்த வழக்கை நாங்கள் சந்திப்போம். எங்கள் எண்ணம் கூட்டுத் தலைமை வேண்டும் என்பதுதான். அப்போதுதான் இந்த இயக்கம் வலுவானதாக இருக்க முடியும்.

சசிகலா, தினகரன்
ஓபிஎஸ், இந்த இயக்கம் வளர்வதற்கு பாடுபட்டவர்கள் அனைவரையும் வாருங்கள் என அழைத்திருக்கிறார். அதிமுகவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் அழைத்துள்ளார். அவர்களை அழைக்கவில்லை, இவர்களை அழைக்கவில்லை என்ற பேதம் இல்லை. குறிப்பாக, டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கும் இந்த அழைப்பு என்று சொல்லியிருக்கிறார்.

ஈபிஎஸ் கொடூர முகம்
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது எடப்பாடி பழனிசாமி முகம் எவ்வளவு கொடூரமாக இருந்தது. அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வத்தின் முகத்தைப் பார்த்திருப்பீர்கள். புன்சிரிப்பு தெரிந்தது. இதில் இருந்தே தெரிந்து கொள்ளுங்கள். உள்ளத்தில் இருப்பதுதான் முகத்தில் தெரியும்.

லிஸ்ட் போடுங்க
ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தான். தலைமைக் கழகத்திற்குச் செல்வது அவரது உரிமை, கடமை. அலுவலகத்தில் எந்தெந்த ஆவணங்கள் திருட்டு போயுள்ளது என பட்டியலிட்டு அவர்கள் தெரிவிக்க வேண்டும். சும்மா குற்றச்சாட்டு சொல்லக்கூடாது." எனத் தெரிவித்துள்ளார்.
-
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications