“நடக்கக்கூடாதது நடக்கிறதா?” அரசியலில் மிகப்பெரிய ட்விஸ்ட்? மூத்த பத்திரிகையாளர்கள் திடீர் எச்சரிக்கை
சென்னை: தவெக, ஆட்சி அமைக்க உரிமை கோரி வரும் நிலையில், தமிழக அரசியலில் மிகப்பெரிய ட்விஸ்ட்டாக ஒரு தகவல் சிறகடித்துப் பறக்கிறது. திமுக - அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கத் தயராவதாக ஒரு தகவல் பரபரக்கிறது. இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர்கள் சிலரும் பேசியுள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனித்து 108 இடங்களில் வென்றுள்ளது. எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றிருப்பதன் மூலம், அக்கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. மேலும் 2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசமும் தவெக கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தனித்து 59 தொகுதிகளிலும், அதிமுக தனித்து 47 தொகுதிகளிலும் வென்றுள்ளன. அதேபோல் திமுக கூட்டணியாக 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணியாக 53 தொகுதிகளிலும் வென்றுள்ளன. 1967இல் திமுக ஆட்சி அமைத்தது முதல் திமுகவோ அல்லது அதிமுகவோதான் கடந்த 59 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆண்டு வந்துள்ளன. இரு கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி விஜயின் தவெக முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.
பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களில் வெற்றி பெற்றால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்பதால், தவெகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் ஒன்றில் பதவி விலக வேண்டும். அதனால், ஒரு தொகுதியின் எண்ணிக்கை குறையும். அப்படியானால், தவெகவிற்கு 107 எம்எல்ஏக்களே இருப்பார்கள். தவெகவிற்கு மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தற்போது தவெகவுக்கு கிடைத்துள்ளது.
திமுக கூட்டணியில் மேலும் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐ.யூ.எம்எல் ஆகியவை தலா 2 இடங்களிலும் தேமுதிக ஒரு இடத்திலும் வென்றுள்ளன. அதிமுக கூட்டணியில் அக்கட்சி தவிர்த்து பிற கட்சிகள் 6 இடங்களில் மட்டுமே வென்றுள்ளன. அதில் பாமகவிற்கு 4, பாஜக மற்றும் அமமுகவிற்கு தலா ஒரு எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் உள்ள கட்சிகள் விலகி தவெகவிற்கு 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தால்தான் அக்கட்சி ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் உள்ளது.
இந்தச் சூழலில் தான் தமிழக அரசியலில் மிகப்பெரிய ட்விஸ்ட்டாக ஒரு தகவல் சிறகடித்துப் பறக்கிறது. திமுக - அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கத் தயராவதாக ஒரு தகவல் அரசியல் அரங்கில் பரபரக்கிறது. இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர்கள் சிலரும் பேசியுள்ளது பெரும் பரபரப்பு நெருப்பைப் பற்ற வைத்துள்ளது.
DONT. DO. THIS pic.twitter.com/kAjsJDojMm
— RadhakrishnanRK, PhD. (@RKRadhakrishn) May 6, 2026
மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே என்கிற ராதாகிருஷ்ணன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் பேசுகையில், "இதை செய்யாதீங்க.. இது மிக மிகப்பெரிய தவறு. நான் கேட்கும் சில செய்திகள் எனக்கே பயங்கர அதிர்ச்சி தரும் அளவுக்கு இருக்கிறது.
நான் அரசியல்வாதி இல்லை என்றாலும் கூட எனது 40 வருட பத்திரிகையாளர் வாழ்க்கையில் அரசியலில் பலவற்றைப் பார்த்துவிட்டேன். எனினும், இது மட்டும் நடக்கக்கூடாது. நான் கேள்விப்படுவது வெறும் வதந்தியாகவே மறைந்துவிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
What we are hearing is real crazy stuff. Hope it is not true.
— Sumanth Raman (@sumanthraman) May 6, 2026
மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சுமந்த் ராமன், "நாங்கள் கேள்விப்படுபவை மிகவும் வேடிக்கையான விஷயங்கள். அது உண்மையாக இருக்காது என்று நம்புகிறோம்." என தமது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவரும், திமுக - அதிமுக கூட்டணியாக இணைந்து ஆட்சியமைக்கப்போவதாக பரவும் தகவல் குறித்து மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சமூக வலைதளங்களை தவெகவினர் தந்திரமாக பயன்படுத்தினார்கள்.. கே.என்.நேரு பேச்சு -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications