சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வல்லூர் அனல்மின் நிலையம் மொத்தமாக மூடல்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி

சென்னை அருகே இயங்கி வந்த வல்லூர் அனல்மின் நிலையம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அருகே இயங்கி வந்த வல்லூர் அனல்மின் நிலையம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் வல்லூர் அனல்மின் நிலையம் செயல்பட்டு வந்தது. வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதில் மொத்தம் மூன்று அலகுகள் இருந்தது.

Vallur Thermal Power Station closes all its terminal after Chennai High Court Order

3 அலகுகளிலும் தலா 500 மெகாவாட் என 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு மிக சிறப்பாக இது இயங்கி வந்தது. தமிழகத்தின் மின் தேவையின் ஒரு பகுதியை இது பூர்த்தி செய்து வந்தது.

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த சரவணன் என்பவர் இந்த வல்லூர் அனல்மின் நிலையத்திற்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த அனல்மின் நிலையம் தனது சாம்பல் கழிவுகளை சதுப்பு நில பகுதிகளில் கொட்டுவதாக வழக்கு தொடுத்தார்.

இதனால் மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள் என்றும் கூறினார். கடந்த சில வாரங்களாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் சென்னை ஹைகோர்ட் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி வல்லூர் அனல்மின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்த தீர்ப்பில் வல்லூர் அனல்மின் நிலையம் சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டி வந்தது. இதற்கு அவர்கள் அனுமதி வாங்கவில்லை.

மத்திய அரசின் விதிகளை மீறி சாம்பலை கொட்டி வந்துள்ளனர். வல்லூர் அனல்மின் நிலையத்துக்கு மத்திய அரசு அளித்த அனுமதி 2018 மார்ச்சுடன் முடிவடைந்தது. இதனால் இந்த நிலையத்தை மூட வேண்டும் என்று என்றுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து வல்லூர் அனல்மின் நிலையம் மூடப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொஞ்சம் மின்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

English summary
Vallur Thermal Power Station shuts down all its terminal after Chennai High Court Order.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X