Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வண்டலூருக்கு வந்த விருந்தாளி.. ரயில்வே தண்டவாளத்தில் குப்புற விழுந்து.. சென்னை ஐ.டி. கம்பெனியே குறி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம், விற்பனை போன்றவற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசுடன் இணைந்து காவல்துறை எடுத்து வருகிறது. எனினும், முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.. இந்நிலையில், வண்டலூரில் நேற்று நடைபெற்ற சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை சென்னை மாநகருக்குள் ஏற்படுத்தியிருக்கிறது.

சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏற்கனவே கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார்.

Vandalur Railway Station Chennai IT Companies

அப்படியிருந்தும்கூட, பக்கத்து நாடுகளிலிருந்து போதைப் பொருள் கடத்துவது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது போன்ற குற்றச் செயல்கள் அவ்வப்போது நடப்பதும், அதில் போலீசார் நடவடிக்கை எடுப்பதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

ஸ்பெஷல் ரெய்டுகள்

எனவேதான், சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய, சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.. இதற்காகவே போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், வண்டலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக ஓட்டேரி போலீசாருக்கு ரகசிய தகவல் நேற்று கிடைத்திருக்கிறது.. இதையடுத்து, தீவிர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

வண்டலூர் ரயில்வே ஸ்டேஷன்

அப்போது, வண்டலூர் ரயில் நிலையம் அருகே, 2 இளைஞர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக மீண்டும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. இதனால், வண்டலூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு போலீசார் விரைந்து சென்றனர்.. ஆனால், போலீசாரை பார்த்ததுமே, அந்த 2 பேரும் தப்பி ஓடினார்கள்..

எனினும், போலீசார் அவர்கள் 2 பேரையும் துரத்த துவங்கினர்.. இதனால் பயந்துபோன 2 இளைஞர்களும், தங்கள் கையில் வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தை கீழே போட்டுவிட்டு, ரயில் தண்டவாளத்திலேயே ஓடினார்கள்.

தண்டவாளம் மீது வேகமாக ஓடியதால், 2 பேருமே தடுமாறி கீழே விழுந்து, போலீசாரிடம் சிக்கிவிட்டனர்.. இதையடுத்து அவர்கள் கீழே போட்டுவிட்டு சென்ற 2 கிலோ கஞ்சாவை மீட்ட போலீசார், 2 இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.. அவர்களது பெயர் சம்பத்குமார் (23), மணிகண்டன்(19) என்பது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல், கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர் ஆராமுதன் கொலை வழக்கில் இவர்கள் 2 பேருமே சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

தண்டவாளத்தில் குப்புற விழுந்து

ஆராமுதன் கொலை வழக்கில் ஜெயிலுக்கு சென்று, சமீபத்தில்தான் வெளியே வந்திருக்கிறார்கள்.. வெளியே வந்ததுமே வண்டலூர் பகுதியில் தங்கி, கஞ்சா விற்பனையிலும் 2 இளைஞர்களும் ஈடுபட்டு வந்தது விசாரணையில் அம்பலமானது.

போலீசாரிடம் சிக்காமல் இருக்க தண்டவாளத்தில் குப்புற விழுந்ததில், மணிகண்டனுக்கு இடது கையும், சம்பத்குமாருக்கு வலது காலும் முறிந்துள்ளதாம்.. எனவே 2 இளைஞர்களையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.. அங்கு 2 பேருக்கு மாவு கட்டு போடப்பட்டது.. பிறகு, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார், செங்கல்பட்டு கோர்ட்டில் நேற்று மாலை ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை ஜெயிலில் அடைத்துள்ளனர்.

ஐடி ஊழியர்களே குறி

சமீபகாலமாகவே கஞ்சா புழக்கம் அதிகமாகி கொண்டிருக்கிறது.. சினிமா துறைகளில் அதிக அளவு புழங்குவதாக சொல்லப்படுகிறது.. இதற்கெனவே ஏஜென்ட்கள், புரோக்கர்கள் இருக்கிறார்களாம்.. அதேபோல, சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களை குறி வைத்தும் கஞ்சா விற்பனை நடப்பதாக கூறுகிறார்கள்.. அந்தவகையில் வண்டலூர் பகுதியிலும், ஏராளமான ஐடி கம்பெனிகள் உள்ளதால், போலீசாரின் கண்காணிப்புகள் அங்கு தீவிரமாகி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+