சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்க கட்சியோட ஜனநாயகம் பாரீர்.. நற்சோனை விவகாரத்தில் விசிக வன்னி அரசு தந்த சூப்பர் விளக்கம்!

Google Oneindia Tamil News

சென்னை: ஆணாதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கை நிலைப்பாடு, அதனால்தான் பெண்கள் இந்த கருத்தை எங்கள் கட்சியில் துணிவாக பேச முடிகிறது என கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து விடுதலைத் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு கூறியிருப்பதாவது: #சனாதனத்தின் உள்ளீடே ஆணாதிக்கம். அது, குடும்பத்திலும் நிறுவனங்களிலும் கட்சிகளிலும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது.

அதைத்தான் விடுதலைச் சிறுத்தைகள் மேடையில் தலைவர் திருமாவளவன் முன்னிலையிலேயே மகளிரணி பொறுப்பாளர் பேசியுள்ளார். எல்லா மட்டங்களிலும் ஆணாதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கை நிலைப்பாடு.

பெண்களின் துணிவு

பெண்களின் துணிவு

அதனால் தான் பெண்கள் இந்த கருத்தை எங்கள் கட்சியில் துணிவாக பேச முடிகிறது. இந்த ஜனநாயகம் மற்ற கட்சிகளில் உண்டா? விடுதலைச் சிறுத்தைகளில் மட்டுமே உண்டு. அதற்கு காரணம் சனநாயகத்தலைவன் எமது எழுச்சித்தமிழரே! இவ்வாறு வன்னியரசு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் மணி விழா நேற்றைய தினம் சென்னையில் நடந்தது.

நற்சோனை

நற்சோனை

இந்த விழாவில் மகளிரணி செயலாளர் நற்சோனை பேசினார். அப்போது அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சனாதனம் நிலவுகிறது. விசிக ஆண் நிர்வாகிகள் பெண்களை எவ்வளவு கேவலமாக திட்ட முடியுமோ அவ்வளவு கேவலமாக திட்டி இருக்கானுக.. நான் அனைத்தையும் ரெக்கார்சு செய்து வைத்துள்ளேன். அதை எல்லாம் காட்டுகிறேன்.

ஆண் சமூகம்

ஆண் சமூகம்

நமது கட்சியின் ஆண் சமூகம் இன்னமும் திருந்தவில்லை. ஆண் சமூகம் திருந்த வேண்டும். நாங்கள் சனாதனத்தை எதிர்க்கிறோம். ஆனால் சனாதனம் இன்னும் நம் கட்சியில் இருக்கிறது. டாப் டூ பாட்டம் வரை இருக்கிறது. அப்போது பின்னால் அமர்ந்திருந்த விசிக நிர்வாகியை திருமாவளவன் அழைத்து ஏதோ சொல்ல அவர் உடனே நற்சோனையை பேச வேண்டாம் என தடுத்தார். திடீரென மைக்கை கைகளால் மூடினார்.

நற்சோனை ஆவேசம்

நற்சோனை ஆவேசம்

ஆயினும் நற்சோனை ஆவேசமாக பேசிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அந்த நிர்வாகியின் முயற்சி தோல்வியில் முடிவடைந்ததால் மைக்கை அணைத்து விட்டனர். அப்போது கீழே அமர்ந்திருந்த பெண் நிர்வாகிகள் கத்தி கூச்சல் போட்டனர். நற்சோனைக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். கட்சித் தலைவர் முன்பு இத்தனை தைரியமாக ஒரு கருத்தை எடுத்து வைத்த நற்சோனையின் வீடியோ வைரலாகி வருகிறது.

சனாதனத்தை வேரறுப்போம்

சனாதனத்தை வேரறுப்போம்

சனாதனத்தை வேரறுப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முழங்கி வருகிறார். ஆனால் அவருடைய கட்சியிலேயே சனாதனம் இல்லை என்பதை அந்த பெண் நிர்வாகி புட்டு புட்டு வைத்துவிட்டார். இது தொடர்பாக பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து அமைப்பினர் அந்த வீடியோவை வைரலாக்கி, வன்னியரசு, ஆளுர் ஷாநவாஸ் உள்ளிட்டோரை டேக் செய்து இதுதான் சனாதனமா என கேளவி எழுப்பி வருகிறார்கள்.

மைக்கை ஆப் செய்தது ஏன்

மைக்கை ஆப் செய்தது ஏன்

இதுகுறித்துதான் வன்னியரசு தனது ட்விட்டர் பக்கத்தில் ஜனநாயகம் இருப்பதால்தான் எங்கள் கட்சியில் பெண்கள் துணிவாக பேச முடிகிறது என்றார். இதற்கு நெட்டிசன்கள் அப்புறம் ஏன் மைக்கை ஆஃப் செய்தீர்கள் எனகிறார்கள். மேலும் அண்ணே நீங்கள்தான் அந்தம்மாவை பேசவே விடலையே அதற்குள்ளாகவே திருமாண்ணே மைக்க ஆஃப் செய்ய சொல்லிட்டாரே, அப்புறம் எங்குட்டு பெண் சமத்துவம் என்கிறார் இந்த வலைஞர்.

மீசைல மண் ஒட்டல

மீசைல மண் ஒட்டல

கீழே விழுந்தீங்க. ஆனால் மீசைல மண் ஒட்டல அப்படித்தானே வன்னி அண்ணே மண்ணை துடைச்சுங்கோங்க முதல்ல என்கிறார் இந்த வலைஞர்.

English summary
VCK Vanniarasu explains about Democracy is not in other parties except VCK. This is the reason Woman activist Narchonai expressed before Thirumavalavan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X