உயர்நீதிமன்றத்தின் அறிவுரை விஜய்க்கு மட்டுமல்ல.. ரஜினி உள்ளிட்டவர்களுக்கும்தான்.. வன்னியரசு ட்வீட்!
சென்னை: உயர்நீதிமன்றத்தின் அறிவுரை நடிகர் விஜய்க்கு மட்டுமல்ல நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை உலகத்தை சேர்ந்தவர்களுக்கும்தான் என விசிக வன்னியரசு தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் தேதி இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் காரை இறக்குமதி செய்தார். அந்த காரின் விலை ரூ 5 கோடிக்கு ஆகும். இதற்கு இறக்குமதி வரியோ ரூ 1.6 கோடி ஆகும்.
இந்த பணத்தை செலுத்தாததால் அவரது வாகனம் பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து அவர் வரி பணத்தை செலுத்த வேண்டும் என வருவாய் துறை உத்தரவிட்டிருந்தது.

விஜய்
இதை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினார் விஜய். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அபபோது வரி விலக்கு கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் விஜய்க்கு ரூ 1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் அந்த ஒரு லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வன்னியரசு
இந்த நிலையில் இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் உயர்நீதிமன்றத்தின் இந்த அறிவுரை நடிகர் விஜய் அவர்களுக்கு மட்டுமல்ல; நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட அத்தனை திரை உலகத்தை சேர்ந்தவர்களுக்கும் தான்.
#ரீல்ஹீரோ என தெரிவித்துள்ளார்.

ரஜினி முறையீடு
ஏற்கெனவே ரஜினிகாந்த் கொரோனா காலத்தில் தனது திருமண மண்டபம் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை மூடப்பட்டிருந்தது. வருமானம் இன்றி மூடியிருந்த திருமண மண்டபத்திற்கு ரூ 6.50 லட்சம் அரையாண்டுக்கு சொத்து வரி செலுத்துமாறு நோட்டீஸ் வந்திருந்தது. இதையடுத்து நோட்டீஸ் அனுப்பிய ஒரு வாரத்திற்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினி முறையிட்டார்.

கண்டனம்
இதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து ஒரு வாரத்திலேயே முறையீடா, இதென்ன நீதிமன்றமா இல்லை மாநகராட்சி அலுவலகமா என கேட்டு மனுவை வாபஸ் பெறாவிட்டால் கடும் அபராதம் விதித்து தள்ளுபடி செய்வதாக நீதிபதி எச்சரித்தார். இதையடுத்து ரஜினிகாந்த் தனது மனுவை வாபஸ் பெற்றார்.












Click it and Unblock the Notifications