அன்பு மலர்களே.. மீண்டும் இணையும் ’இரட்டை இலை’? எட்டிப்பார்த்த ‘மாஜிக்கள்’! கதவை அடைத்த எடப்பாடி!
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக பல்வேறு யூகங்கள் வெளியாகி வரும் நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைய வாய்ப்பிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூறிவரும் நிலையில் நூற்றுக்கு நூறு சதவீதம் இணைய வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிச்சாமி விடாப்பிடியாக மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் சரி கட்சி பொறுப்பில் இருந்தபோதும் சரி அதிமுக எப்படி இருந்ததோ அதற்கு அப்படியே தலைகீழாக இருப்பதாக அக்கட்சி தொண்டர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.
அவரது மறைவுக்குப் பின் ஒவ்வொரு நாளும் பல்வேறு சிக்கல்களை அதிமுக சந்தித்து வருகிறது. சசிகலா விவகாரம், டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் மோதல் என ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சனைகளில் சிக்கி பேசு பொருள் ஆவது தான் அதிமுகவின் வாடிக்கையாகி போனது.

அதிமுகவில் மோதல்
அந்த வகையில் முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் மோதல் , எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி என மீண்டும் சிக்கல்களை சந்தித்து வந்த அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் தான் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு போர்க்கொடி தூக்க, முடியவே முடியாது என அடம்பிடித்து வருகிறார் ஓபிஎஸ்.

மீண்டும் இணைப்பு?
இந்த நிலையில் கட்சியின் எதிர்கால நலன் மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்கள் காரணமாக எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைந்து ஒன்றாக செயல்பட வேண்டும் என கட்சியின் சில மூத்த நிர்வாகிகள் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து பச்சை சிக்னல் கிடைத்துள்ள போதிலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் சில மூத்த முன்னாள் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் இது தொடர்பாக ஆலோசிக்கலாம் என கூறி இருக்கின்றனர்.

விட்டுக் கொடுக்காத எடப்பாடி
இதன் ஒரு பகுதியாகவே ராமநாதபுரம் மாவட்டம் முன்னாள் அமைச்சர் ஆன மணிகண்டன் மக்களவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைலாம் என்று ரீதியில் பேசியிருக்கிறார். ஆனால் இதையெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி முற்றிலும் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் சசிகலா மற்றும் ஓபிஎஸ்க்கு 100% இடம் இல்லை என உறுதியாக மூத்த நிர்வாகிகளிடம் கூறிவிட்டாராம். இது தொடர்பாக மறைமுகமாக அழுத்தம் கொடுத்த 'மேல்' இடத்துக்கும் மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் தனது செல்வாக்கு காரணமாக குறிப்பிட தகுந்த வெற்றியை பெற முடியும் எனவும் இதற்காக கட்சியை தயார்படுத்தி வருவதாக தெரிவித்து இருக்கிறார்.

தனிக்கட்சி
மேலும் ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் பக்கம் வந்தால் ஏற்றுக் கொள்ளலாம் எனவும் ஆனால் ஓபிஎஸ் அவரது மகன் வைத்தியலிங்கம் ஆகியோருக்கு அதிமுகவில் மீண்டும் இடமில்லை என விடாப்பிடியாக மறுத்துவிட்டார் என்கின்றனர் சேலம் தரப்பு ரத்தத்தின் ரத்தங்கள். ஓபிஎஸ் தலைமையில் அதிமுக வர வாய்ப்பில்லை என மூத்த நிர்வாகிகள் கூறி வரும் நிலையில், தனியாக கட்சி ஆரம்பிக்கலாமா என ஓபிஎஸ் தரப்பு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications