• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஃப் டவுசர் போட்டுட்டு அமைச்சர்கள் போறாங்க.. எவ்வளவு வெட்கக் கோடு பாருங்களேன்! கொந்தளித்த திருமா!

Google Oneindia Tamil News

சென்னை : ஆர்எஸ்எஸ் பேரணி மூலம் சமூகநீதியை பாதுகாக்க போகிறார்களா? ஜெய் ஸ்ரீ ராம் என்ன முழக்கத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது மட்டும்தான் அவர்களின் நோக்கம் எனவும், புதுச்சேரியில் மூன்று அமைச்சர்கள் அரைக்கால் சட்டை போட்டு ஆர்எஸ்எஸ் பேரணியில் கலந்து கொள்வது எவ்வளவு வெட்க கேடானது என விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் பேரணி பேரணி குறித்துப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன்," வள்ளுவம் தமிழினத்திற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே பொதுவானது , அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது

காலத்தால் வழிபடும் மதத்தை கூட மாற்றிக்கொள்வோம், ஆனால் வள்ளுவத்தை மாற்ற முடியாது. பெரியாருக்கு சில பேர் பூனூல் போட்டு பார்க்கிறார்கள், சில பேர் காவி உடுத்தி பார்க்கிறார்கள். பெரியார் காவியை விரும்பி இருந்தால் சங்கராச்சாரியார்களுக்கு இடம் இருந்திருக்காது.

 பெரிய சதி முறியடிப்பு! பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்களை குறிவைத்த பயங்கரவாதிகள் கைது!கடைசி நிமிடத்தில் பரபர பெரிய சதி முறியடிப்பு! பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்களை குறிவைத்த பயங்கரவாதிகள் கைது!கடைசி நிமிடத்தில் பரபர

தொல்.திருமாவளவன்

தொல்.திருமாவளவன்

தீவிர ஆன்மிக குடும்ப பின்னணியில் பிறந்து, சாதி, மத இல்லை என்று சொன்னவர் பெரியார். உழைக்கும் மக்களின் குரலாக மாறி, அவர்களின் விடுதலைக்கு போராடியவர் பெரியார். ஈரோட்டில் பிறந்த வள்ளுவர் தந்தை பெரியார், வள்ளுவமும் பெரியாரின் கொள்கைகளும் ஒன்று தான். பெரியார் பிறந்த இந்த மண்ணில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை நாம் அனுமதிக்கலாமா? மதத்தின் பெயரால் தமிழ்நாட்டை வன்முறை காடாக மாற்றிட வித்திடுகிறார்களே அதை நாம் அனுமதிக்க போகிறோமா?

ஆர்எஸ்எஸ் பேரணி

ஆர்எஸ்எஸ் பேரணி

ஆர்எஸ்எஸ் பேரணி மூலம் சமூகநீதியை பாதுகாக்க போகிறார்களா? ஜெய் ஸ்ரீ ராம் என்ன முழக்கத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது மட்டும்தான் அவர்களின் நோக்கம். புதுச்சேரியில் மூன்று அமைச்சர்கள் அரைக்கால் சட்டை போட்டு ஆர்எஸ்எஸ் பேரணியில் கலந்து கொள்வது எவ்வளவு வெட்க கேடானது. ஆர்எஸ்எஸ் சராசரி ஜனநாயக இயக்கம் இல்லை, அவர்கள் பாசிச இயக்கம். மக்களின் அத்திவாசிய பிரச்சனைக்காக ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தவில்லை, மதவாத கருத்துகளை இளைஞர்களிடம் புகுத்தி பிரிவினைவாதத்தை ஏற்படுத்த தான் இந்த பேரணியை நடத்த துடிக்கின்றனர்.

 பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா

பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா

ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு 18 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்பு உள்ளது. தீவிர அமைப்பு தொடர்பு உள்ளது என பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பை தடை செய்த ஒன்றிய அரசு, 18 குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்புடைய ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்யவில்லை. இது போன்ற பேரணிக்கு நாம் ஆதரித்தால் அடுத்த 10 ஆண்டுக்கு பிறகு நாம் கருப்பு, நீலம், சிவப்பு சட்டை அணிய முடியாது. மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். தமிழ்நாடு கருத்தால் முற்போக்கானது

சமூக நல்லிணக்க மனித சங்கிலி

சமூக நல்லிணக்க மனித சங்கிலி

11 ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் நாம் காட்டுகிற ஒற்றுமையை பார்த்து அவன் வாலை சுருட்டிக் கொண்டு ஓட வேண்டும். திராவிட இயக்கத்தின் பாசறை தளபதி தான் திமுகவில் இருக்கிறார் அவருக்கு பெயர் ஆ ராசா. எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்க்கொள்ளக்கூடிய துணிச்சல் கொண்ட முதலமைச்சராக நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் கலவையாக நமது முதலமைச்சர் இருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

விஜயகாந்த் அவர்களின் தேமுதிக எதிர்கட்சியாக உருவான போது திமுக என்ற கட்சி இல்லை என்று சொன்னவர் மத்தியில், அடுத்த தேர்தலில் 30 தொகுதி வித்தியாசத்தில் எதிர்கட்சியாக அமர்ந்து திமுக அடுத்த தேர்தலில் எதிர்கட்சியே இல்லை என்று பெருவாரியான வெற்றி பெற செய்தவர் தமிழ்நாடு முதலமைச்சர். காங்கிரஸ், இடதுசாரி அமைப்புகளை ஒன்றிணைத்து சந்தித்த தேர்தலில் எல்லாம் வெற்றி பெற்றவர் மு.க.ஸ்டாலின். சமூக நீதிக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை முதலமைச்சர் பார்த்து கொண்டு இருக்கிறார், எரிமலை பார்ப்பதற்கு அமைதியாக இருப்பது தெரியும் , அது வெடிக்கும் போது தான் அதன் தீவிரம் தெரியும்." என்றார்.

English summary
Are they going to protect social justice through RSS rally? vck leader Thirumavalavan has strongly criticized that their aim is only to take the slogan of Jai Shri Ram to the people and how shameful it is for three ministers to participate in the RSS rally in Puducherry wearing half-length shirts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X