தவெக ஆட்சி கவிழப்போகிறதா? கூட்டணி கட்சிகள் நிலைப்பாடு என்ன? திருமாவளவன் ரியாக்ஷன்
சென்னை: தவெக ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல் குற்றம் சாட்டியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த திருமாவளவன், ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக திருமாவளவன் கூறிய கருத்துகளை பார்க்கலாம்.
தமிழகத்தில் தவெக ஆட்சியை கவிழ்க்க அதிமுக, திமுக, பாஜக இணைந்து சதி திட்டம் போடுவதாக அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பை கிளப்பினார். எத்தனை கோடி கொடுத்தாலும் தவெக எம்.எல்.ஏக்கள் விலை போக மாட்டார்கள் என்றும் கூறியிருந்தார். அதே நேரத்தில் தவெகவில் 60 முதல் 70 எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்கள் இணைந்து நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால் நாங்கள் ஆதரவு அளிப்போம் என்று திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறினார்.

தவெக ஆட்சி கவிழப்போகிறதா?
இதனால், தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த விவாதம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் விசிக தலைவர் தொல் திருமாவளவனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
இந்த முயற்சி நடக்கிறதா இல்லையா என்றால் எனக்கு தெரியாது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என நான் கருதுகிறேன். ஆதரவு நல்கி வருகிற கூட்டணி கட்சிகள் அந்த ஆதரவை திரும்பப்பெறப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறோம். காங்கிரசோ, விசிகவோ, முஸ்லீம் லீக்கோ, இடதுசாரிகளோ ஆதரவை திருமப்பெறும் வாய்ப்பு இல்லை என்கிற போது, ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பில்லை என்று நான் பெரிதும் நம்புகிறேன்.
வேறு வழியில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார்கள்
எனவே அவர்கள் வேறு எந்த வழியில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.. என்றார். உடனே செய்தியாளர்கள், தவெக எம்.எல்.ஏக்களை வைத்து ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த திருமாவளவன், அதற்கு வாய்ப்பு இல்லை என்றார். மேலும், தவெக எம்.எல்.ஏக்கள் அந்த அளவுக்கு பலவீனமாக இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.. என்றார்.
தொடர்ந்து இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில் விஜய் பங்கேற்காதது குறித்து பதில் அளித்த திருமாவளவன், இந்தியா கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இடம்பெற்று விட்டார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என அவர்களிடம் தான் கேட்க வேண்டும். ஒருவேளை டெல்லியில் இருந்து அழைப்பு விடுக்காமல் இருந்திருக்கலாம். அவர்கள் அழைத்தார்களா என்பது தெரியாது.." என்றார்.
மின் கொள்முதலில் ஊழலா?
மின்பொருள் நுகர்வில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும், கேரளாவில் ஒரு யூனிட் 14 ரூபாய்க்கு வாங்கும் போது நாம் ஏன் (ஒரு யூனிட் 35 ருபாய்) இவ்வளவு தொகை கொடுத்து வாங்க வேண்டும் என மு.க ஸ்டாலின் கூறியது குறித்து பேசிய திருமாவளவன், "மின்சாரம் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக விவாதங்கள் வருகின்றன. மின்வெட்டு ஆங்காங்கே இருந்து வருகிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும். நேரடியாக தலையிட வேண்டும். எதிர்க்கட்சிகள் வைக்கின்ற குற்றச்சாட்டுகள் என கடந்து போகாமல் பொதுமக்களின் பிரச்சனைகள் என கவனம் செலுத்தில் அதில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.." என்றார்.

" title="அவரே இன்னும் வாய் திறக்கலையே.. அரசியலுக்கு வரப் போகும் தனுஷ்? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன திருமா!

Click it and Unblock the Notifications
