14 ஆண்டுகள் ஆச்சு...உயிருடன் இருக்க சான்ஸே இல்லை.. இனி பிரபாகரனுக்கு வீரவணக்கம்.. திருமாவளவன்
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை; ஆகையால் பிரபாகரனுக்கும் இனி விடுதலை சிறுத்தைகள் கட்சி வீரவணக்கம் செலுத்தும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்தது. அத்துடன் பிரபாகரன் உடல் என ஒன்றையும் அடையாளப்படுத்தியது. ஆனாலும் பிரபாகரன் மரணம் தொடர்பான சந்தேகங்களும் கேள்விகளும் கடந்த 14 ஆண்டுகளாக இருந்து வருகின்றன.

அண்மையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் திடீரென பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; அவர் விரைவில் வெளியே வருவார் என அறிவித்து பரபரப்பை கிளப்பினார். மேலும் பிரபாகரன் மனைவி மதிவதினி, மகள் துவாரகா ஆகியோர் ஐரோப்பிய நாடு ஒன்றில் பதுங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் தமிழ்நாட்டு தலைவர்கள் பலரும் பிரபாகரன் உயிருடன் இருப்பது தொடர்பான முரண்பாடான கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
பொதுவாக பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஒரு சிலர் தவிர பிரபாகரன் உயிருடன் இல்லை; அவர் உயிருடன் இருந்திருந்தால் இப்படி பதுங்கி இருக்க மாட்டார்; பெற்ற மகன்களை போரில் இழந்துவிட்டு அவர் மட்டும் தப்பி ஓடி ஒளிந்து கொண்டிருக்க கோழை அல்ல என்கிற கருத்தையே முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் பிரபாகரன் இனி உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை; அவர் மரணம் அடைந்துவிட்டதாக கருதி இனி பிரபாகரனுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் கூறுகையில், நாங்கள் உட்பட அனைவருமே பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும்; உயிரோடு இருப்பார் என்ற எதிர்பார்ப்புடன் 14 ஆண்டுகளைக் கடந்து வந்துள்ளோம். ஆனால் யதார்த்தத்தில், பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் தப்பிப் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே இனி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மேதகு பிரபாகரன் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும். அடுத்த ஆண்டு முதல் இதனை நாங்கள் பின்பற்றுவோம் என்றார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications