திருமாவளவனை காப்பாற்றிய.. 2 பெண் வேட்பாளர்கள்! கடும் போட்டியில் களம்!
சென்னை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, 8 தொகுதிகளில் களமிறங்கியிருந்தது. இந்நிலையில், இதில் 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. இந்த 2 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருந்தனர்.
தமிழகத்தில் கடந்த 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலலை 11 மணி நிலவரப்படி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 101 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதேபோல, அதிமுக 78 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால், திமுக வெறும் 54 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றிருக்கிறது.

அதிலும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில், அக்கட்சிகள் தலா 2 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கின்றன. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. ஒன்று அரக்கோணம் எழில் கரோலின், மற்றொன்று காட்டுமன்னார்கோவில் ஜோதிமணி.
இந்த இரண்டு வேட்பாளர்களும் தற்போது முன்னிலையில் இருக்கின்றனர். மற்றபடி விசிக போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்திருக்கிறார்கள். இந்த இரண்டு பெண் வேட்பாளர்கள் மூலம் திருமாவளவன் ஜஸ்டு மிஸ்ஸில் தப்பியிருக்கிறார்.
ஆனால், களநிலவரம் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது. காலை 11 மணிக்கு 2 தொகுதிகளில் முன்னிலையில் இருந்த வேட்பாளர்கள், 11.05க்கு 1 தொகுதியில் மட்டும் முன்னிலையில் இருக்கிறார்கள். அரக்கோணம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பளார் காந்திராஜன் முதலிடம் வந்திருக்கிறார். விசிக வேட்பாளர் 3வது இடத்திற்கு சரிந்திருக்கிறார். இதுவரை 3 சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டிருக்கின்றன.
-
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா!












Click it and Unblock the Notifications