சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்.. மைதிலி சிவராமன் கொரோனாவால் காலமானார்

Google Oneindia Tamil News

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தில் பெண்கள் புரட்சிக்கு வித்திட்ட முக்கிய தலைவர்களில் ஒருவருமான மைதிலி சிவராமன் (81) கொரோனா தொற்றால் காலமானார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா கண்டறியப்பட்டது. இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனிற்றி இன்று உயிரிழந்தார்.

Veteran Marxist Communist leader mythili sivaraman passed away due to coronavirus

மைதிலி சிவராமன் 1939ஆம் ஆண்டு பிறந்தவர், இவர் டெல்லி இந்தியன் ஸ்கூல் ஆப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் கல்வி நிறுவனத்தில் மாஸ்டர்ஸ் டிப்ளமோ படித்ததுள்ளார். பிறகு அமெரிக்காவில் உள்ள சிரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

ஐநாவில் மூன்றாம் உலக நாடுகள் குறித்து இந்திய அரசுக்கு அறிக்கையளிக்கும் பணியில் கொஞ்ச காலம் இருந்தவர் மைதிலி சிவராமன். 1968ஆம் ஆண்டு, ஐநா சபையில் தனது வேலையைத் துறந்த இவர், தமிழகம் திரும்பினார். அதன் பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு மைதிலி சிவராமன் குரல் கொடுத்துள்ளார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தமிழக மாநிலக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் 1973ஆம் ஆண்டு உருவானது. அப்போது அந்த அமைப்பின் தலைவராக கே.பி.ஜானகியம்மாளும் துணைத் தலைவராக மைதிலி சிவராமனும் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், 1968ஆம் ஆண்டு கீழவெண்மணியில் 41 விவசாயக் கூலித்தொழிலாளர் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது நேரடியாகக் களத்திற்குச் சென்று, இந்தப் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்தி, புத்தகம் வெளியிட்டார். அதன் பின்னரே கீழவெண்மணியில் நடந்த சாதியப் படுகொலை பற்றி உலகுக்குத் தெரியவந்தது. 1992ஆம் ஆண்டு நடைபெற்ற வாச்சாத்தி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கிலும் நீதி கிடைக்க மைதிலி சிவராமனின் பங்கு முக்கியமானது.

தஞ்சை மருத்துமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைத்து கொடுத்த துபாய் தொழில் அதிபர்! தஞ்சை மருத்துமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைத்து கொடுத்த துபாய் தொழில் அதிபர்!

மைதிலி சிவராமனின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

English summary
mythili sivaraman's latest health update
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X