அடிச்சாலும் பாஜக பெயரை உச்சரிக்காதீங்க.. விக்கிரவாண்டி டூ மாமல்லபுரம் வரை 'விஜய்' விடாப்பிடி விரதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அதன் 2-வது ஆண்டு தொடக்க விழாவையும் நடத்தி இருக்கும் நடிகர் விஜய் இதுவரையில் மத்தியில் ஆளும் பாஜகவின் பெயரை ஒரு முறை குறிப்பிட்டு விமர்சித்ததே இல்லை; விக்கிரவாண்டி மாநாட்டில் திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய், மாமல்லபுரம் நிகழ்ச்சியில் திமுக- பாஜக இரு கட்சிகளின் பெயரையும் குறிப்பிடாமல் 'பாசிசம் பாயாசம்' 'கொள்கை- அரசியல் எதிரிகள்' என்று மட்டுமே குறிப்பிட்டார்.

நடிகர் விஜய்யை நீண்டகாலமாக ஜோசப் விஜய் என்று சீண்டிக் கொண்டே இருந்தது பாஜகதான். இதற்கு பதிலடி தரும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நாள் முதலே வெளியிடுகிற அறிக்கைகளில் ஜோசப் விஜய் என குறிப்பிடுவதை விஜய் வழக்கமாக வைத்திருக்கிறார்.

TVK Tamilaga Vettri Kazhagam Vijay

விக்கிரவாண்டியில் கொள்கை விளக்க மாநாட்டை நடத்திய நடிகர் விஜய் தமது கொள்கை எதிரி, அரசியல் எதிரி ஆகியோரை அறிவித்தார். அரசியல் எதிரியாக திமுகவை பகிரங்கமாக குறிப்பிட்டு விமர்சித்த விஜய், கொள்கை எதிரி பாஜக என பகிரங்கமாக அறிவிக்காமல் மறைமுகமாக, பூடகமாகவே குறிப்பிட்டு பேசினார். இது அப்போதே சர்ச்சையானது. மத்தியில் ஆளுகிற கட்சி என்பதால் பாஜகவின் பெயரை குறிப்பிடுவதற்கு விஜய் அச்சப்படுகிறாரா? எனவும் விவாதங்களில் கேள்வி எழுப்பப்பட்டன. தமிழ்நாட்டில் திமுக மீண்டும் வெற்றி பெறுவதைத் தடுக்க களமிறக்கப்பட்ட பாஜகவின் பி டீம் என்பதையே விஜய் நிரூபிக்கிறார் என்கிற விமர்சனங்களும் கூட முன்வைக்கப்பட்டன.

விக்கிரவாண்டி மாநாட்டுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு அறிக்கைகளை விடும் விஜய், மத்திய பாஜக அரசை கடுமையாக எதிர்க்காமல் பாஜக மற்றும் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசையும் சேர்த்தே கண்டிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது ஆண்டு தொடக்க விழாவிலும் கூட இதே பாணியைத்தான் விஜய் பின்பற்றினார். அதுவும் தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சனையான மும்மொழிக் கொள்கை- இந்தி திணிப்பு, நிதி தர மறுப்பு விவகாரத்திலும் கூட பாஜகவின் பெயரை சொல்லாமல் தவிர்த்து கொள்கை எதிரி- அரசியல் எதிரிகளின் விளையாட்டு என திசைதிருப்பிவிட்டுப் போனார் நடிகர் விஜய்.

வடிவேலு திரைப்பட நகைச்சுவை காட்சி போல, எவ்வளவு அடித்து கேட்டாலும் சொல்லக் கூடாது என்பதாக.. மத்தியில் ஆளும் பாஜக எவ்வளவு பெரிய அநீதியை தமிழ்நாட்டுக்கு இழைத்தாலும் அந்த கட்சியின் பெயரையே சொல்லமாட்டேன் என விரதம் இருப்பது போல கடைபிடித்து வருகிறார் நடிகர் விஜய். இந்த முறை திமுகவின் பெயரையும் சொல்லாமலேயே பாசிசம்- பாயாசம் என விசிலடிப்பதற்கு ஏற்ற வசனங்களை மட்டும் உச்சரித்துவிட்டு பேசி முடித்தார் நடிகர் விஜய்.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+