விஜய்க்கு பெரிய தலைவலி.. ஆட்சியை கண்ட்ரோல் செய்யும் ‘RE’ டீம்.. அவங்க எடுக்குறதுதான் முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், தலைமைச் செயலகம் மற்றும் அரசு நிர்வாகத்தின் பின்னணியில் நடக்கும் சில அதிகார மோதல்கள் குறித்த பரபரப்புச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக, 'RE' என்ற எழுத்தில் பெயர்கள் தொடங்கும் மூன்று நபர் கொண்ட குழு ஒன்று, அரசு நிர்வாகத்திலும் அதிகார மையத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும், ஆட்சியின் முக்கிய முடிவுகளைத் தீர்மானிக்கும் மறைமுக சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

vijay TVK

பின்னணியில் 'RE'

அரசியல் வட்டாரங்களில் 'RE கேங்' (RE Gang) என்று ரகசியமாகக் குறிப்பிடப்படும் இந்த மூன்று நபர்கள், அரசின் உயர் மட்ட முடிவுகளில் நேரடியாகத் தலையிடுவதாகக் கூறப்படுகிறது. அரசுத் துறைகளின் முக்கியக் கோப்புகள், நியமனங்கள் மற்றும் கொள்கை சார்ந்த முடிவுகளில் இவர்கள் தங்களின் செல்வாக்கைச் செலுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் சாதாரண ஆலோசனைகளுடன் தொடங்கிய இவர்களின் தலையீடு, தற்போது அரசு நிர்வாகத்தையே தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அளவுக்கு தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய்க்கு நெருக்கமானவரைப் பயன்படுத்தும் வியூகம்:

இந்த 'RE' குழுவினரின் திடீர் எழுச்சிக்கும் அதிகாரப் பரவலுக்கும் பின்னால் ஒரு முக்கிய காரணி இருப்பதாகக் கூறப்படுகிறது. முதலமைச்சர் விஜய்க்கு மிக மிக நெருக்கமான, அவரது நிழல் போலச் செயல்படும் ஒரு உயர் அதிகார மையத்தின் மூலமாகவே இவர்கள் தங்களின் காய்களை நகர்த்தி வருகின்றனர்.

அந்தச் செல்வாக்குமிக்க நபருடன் தங்களுக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அரசுத் திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் தங்கள் லாபியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். விஜய்யின் கவனத்திற்குச் செல்லும் முன்பே, பல முக்கியமான கோப்புகள் மற்றும் தகவல்கள் இவர்களது கைக்கு மாறிச் செல்வதாகக் கூறப்படுகிறது.

தொடரும் நிர்வாகச் சிக்கல்கள்:

இத்தகைய மேலதிக தலையீடுகளால், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் அரசு துறைச் செயலாளர்கள் விரும்பத்தகாத சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல், அதிகாரப்பூர்வமற்ற இந்த 'லாபி' மூலமாக வரும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகளுக்குள் பெரும் அதிருப்தி நிலவுகிறது.

இதனால், பல மக்கள் நலத் திட்டங்கள் விரைவாகச் செயல்பட முடியாமல் தேக்கமடையும் அபாயமும் உருவாகியுள்ளது. அரசு நிர்வாகத்தில் இந்தத் தன்னிச்சையான போக்கும் குழப்பமும், வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சி நடத்துவதாகக் கூறிய வாக்குறுதிக்கு சவாலாக மாறியுள்ளது.

அரசியல் விமர்சகர்கள் மற்றும் கட்சி மூத்த நிர்வாகிகள் அளிக்கும் எச்சரிக்கையின்படி, இந்த 'RE' குழுவின் செயல்பாடுகளை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால், அது எதிர்காலத்தில் இந்த அரசுக்கு மிகப்பெரிய அரசியல் மற்றும் நிர்வாகத் தலைவலியாக மாறும்.

ஆட்சியின் ஆரம்பக் கட்டத்திலேயே இதுபோன்ற மறைமுக அதிகார மையங்கள் உருவெடுப்பது, மக்கள் மத்தியில் அரசின் நற்பெயருக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும். எதிர்கட்சிகள் இதனை முக்கிய அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி அரசுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடும். ஆட்சிக்கு வந்த முதல் நாளே ஒரே ஒரு பவர் சென்ட்ர்தான் இருக்கும் என்று கூறிய விஜய் அதை நிஜத்தில் நிகழ்த்திக்காட்ட வேண்டும் என்று அதிகாரிகள் கோரிக்கை விடுகின்றனர்.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தலையிட்டு நிலைமையைச் சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை கட்சித் தொண்டர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+