விஜய் ஸ்டாலினிடம் ஆட்சியை மட்டும் பறிக்கவில்லை.. கூடாரத்தை காலி செய்யும் கூட்டணி கட்சிகள்
சென்னை: இதுவரை இல்லாத விசித்திரமான தேர்தல் முடிவு இந்த முறை வந்துள்ளது. தமிழக வெற்றிக்கழகம் திமுகவிடம் ஆட்சியை மட்டும் பறிக்கவில்லை.. கூட்டணியையும் சேர்த்தே பறித்துள்ளது. நேற்றுவரை ஸ்டாலின் உடன் தான் இருப்போம் என்று கூறியவர்கள், பாஜக உள்ளே வந்துவிடக்கூடாது என்று தவெக உடன் கூட்டணிக்கு செல்கிறார்கள்.இன்று காங்கிரஸ் சென்றுள்ளது. நாளை விசிக, இடதுசாரிகள் மற்றும் பிற கட்சிகளும் செல்ல வாய்ப்பு அதிகம். அப்படி நடந்தால் திமுக தனித்துவிடப்படும் நிலை ஏற்படும்.
2021ம் ஆண்டு 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த திமுக, தனிப்பெரும்பான்மையுடன் ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்தியது. திமுக உடன் காங்கிரஸ், இடதுசாரி இயக்கங்கள், முஸ்லிம் லீக், விசிக, மதிமுக போன்றவை கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி வரிசையாக பல தேர்தல்களில் ஒன்றாக பயணித்தன.இதில் மிகப்பெரிய வெற்றியும் பெற்றன. 2019 தேர்தலில் திமுக கூட்டணி தேனி ஒன்றை தவிர 38 தொகுதிகளிலும் வென்றது. 2021 தேர்தலில் 160க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தன. அடுத்ததாக உள்ளாட்சி தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

2024 நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வென்றது. எதிரியே இல்லை என்கிற அளவிற்கு திமுக வளர்ந்து நின்றது. ஆனால் 2026 தேர்தலில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேரடியாக சட்டசபை தேர்தலில் களம் இறங்கினார். இதுவரை இல்லாத ஒரு சரித்திரம் ஏற்பட்டுள்ளது.
60 ஆண்டுகளில் முதல் முறையாக திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி உருவாகிறது. தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வென்றுள்ளது. இதில் திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும், காங்கிரஸ் ஐந்து இடங்களிலும், பாமக நான்கு இடங்களிலும், ஐயுஎம்எல் 2 இடங்களிலும், சிபிஐ, சிபிஎம் தலா இரண்டு இடங்களிலும், விசிக இரண்டு இடங்களிலும், பாஜக, அமமுக, தேமுதிக தலா ஒரு இடத்திலும் வென்றுள்ளன.
இதில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகள் தான் முதலில் தவெக கூட்டணிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே காங்கிரஸ் தற்போது கூட்டணியில் இருந்து விலகி தவெக பக்கம் சாய்ந்துவிட்டது. அடுத்து விசிகவும் நாளை கூட்டணி செல்ல வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
இடதுசாரிகளும் இதே முடிவினை எடுத்து ஆட்சியில் பங்குபெற வேண்டும் அங்கேயும் கலகக்குரல்கள் கிளம்பி உள்ளன. விசிக, இடதுசாரிகளின் பல ஆண்டு கனவான ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது தவெகவால் சாத்தியமாகும் போது , எதற்காக இந்த வாய்ப்பை விட வேண்டும் என்று அவர்களது கட்சிகளிலேயே கலகக்குரல் வெடித்துள்ளது.














Click it and Unblock the Notifications