Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளைக்கு நீங்க தான் சிஎம்..கடைசி தூண்டிலிலும் சிக்காத விஜய்! அலுத்து போன மேலிடம்! இது தான் காரணமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "புலி வருது புலி வருது" கதையாக பாஜக கூட்டணிக்கு தமிழக வெற்றி கழகம் வரப்போகிறது என்ற பேச்சு தான் கடந்த சில தினங்களாகவே தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக இருந்தது. இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை என முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தமிழக வெற்றி கழகம். அதே நேரத்தில் அதிக தொகுதிகள் கிடைத்தால் முதல்வர் பதவி கூட கிடைக்கும் என ஆசை காட்டியும் விஜய் ஒப்புக்கொள்ளவில்லை என்கின்றனர் விவரம் அறிந்த அரசியல் வட்டாரத்தினர்.

2026 தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கின்றன. திமுக கூட்டணியில் இழுபறி நீடித்தாலும் விரைவில் தொகுதி பங்கீடு முடிவுக்கு வரும் என்கின்றனர் திமுகவினர்

அதே நேரத்தில் எதிர் முகாமான அதிமுக இன்னும் வலுவான கூட்டணியை அமைக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. பாஜக அதிமுக பாமக தவத்து பெரிய வாக்கு வங்கிக் கொண்ட எந்த கட்சியுமே இல்லை. சொல்லப்போனால் அதிமுக தவிர்த்து எந்த கட்சிக்குமே 10 சதவீதத்துக்கு மேல் வாக்கு வங்கி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 tvk vijay

விஜய் பாஜக கூட்டணி

இது ஒருபுறம் இருக்க தமிழக அரசியலில் புதிய வரவான விஜய் 10 முதல் 15 சதவீத வாக்கு வங்கியை வைத்திருப்பதாக கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. குறிப்பாக திமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய் பிரித்தால் அது அதிமுக பாஜக கூட்டணிக்கு பாதகமாக அமையும் என்பது டெல்லி கணக்கு. இதை அடுத்து எப்படியாவது விஜயை கூட்டணிக்குள் அழைத்து வர வேண்டும் என பேச்சுவார்த்தைகள் தொடங்கியது. காங்கிரஸ் தவெக கூட்டணி அமையாத நிலையில் கடைசி நேரத்தில் இந்த கூட்டணிக்கான சாத்திய கூறுகள் அதிகம் இருப்பதாகவே சொல்லப்பட்டது.

பாஜக ஆஃபர்

இந்த நிலையில் கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக டெல்லி சென்றார் விஜய். அப்போது பாஜக தலைவர்களை சந்தித்து பேசுவார் எனவும் சொல்லப்பட்டது. 40 முதல் 50 சீட்டுகள், துணை முதலமைச்சர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி என பல ஆஃபர்களை அள்ளிக் கொடுத்தும் விஜய் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு உடன்படவில்லை என சொல்லப்படுகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தை

இந்த நிலையில் பாஜக மட்டுமல்ல எந்த கட்சி உடனும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தவில்லை இது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என கூட்டணிப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியான சிடிஆர் நிர்மல் குமார். அதே நேரத்தில் விஜய் இன்னும் கூட்டணி குறித்து வாய் திறக்கவில்லை. அவர் சொன்னால்தான் நாங்கள் கேட்போம் என்பது போல சமூக வலைதளங்களில் சில பதிவுகளை பார்க்க முடிகிறது.

விஜய் பாஜக கூட்டணி

உண்மையில் விஜய் பாஜக கூட்டணிக்கு சம்மதித்தாரா? பேச்சுவார்த்தை நடத்தினாரா? என்பது குறித்தான சில தகவல்கள் தற்போது கசிந்திருக்கிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய பனையூர் வட்டாரத்தினர்," சிபிஐ விசாரணையை விஜய் தான் கேட்டார். ஜனநாயகன் படத்துக்கு நெருக்கடி வரும் என்பது அவருக்கு தெரியும். அதே நேரத்தில் பாஜகவில் இருந்து சில விஜய் ஆதரவாளர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சில நிர்வாகிகளும் பேசினர். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே பாஜக கூட்டணிக்கு விஜய் ஒப்புக்கொள்ளவில்லை.

விஜய்க்கு முதல்வர் பதவி

கொள்கை எதிரியென பாஜகவை அறிவித்துவிட்டு கூட்டணி சேர்ந்தால் மக்களுக்கு தன் மீதான நம்பகத் தன்மை போய்விடும் என்பதால் விஜய் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. சொல்லப்போனால் மிகப்பெரிய ஆஃபர் ஒன்றையும் பாஜக அளித்தது. அது முதலமைச்சர் பதவி. ஒருவேளை தொங்கு சட்டசபை அமையும் வாய்ப்பு இருந்தால் முதல் வருடமே விஜய்க்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் அல்லது அதிமுக பாஜக பெரும்பான்மை பெற்றாலும் கடைசி ஒரு வருடம் விஜய்க்கு முதல்வர் பதவி தரப்படும் எனக் கூட பாஜக பேசிப் பார்த்தது.

டெல்லி பாஜக தலைமை

இருந்த போதும் விஜய் கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. சமீபகாலமாக அதிமுக பாஜகவினர் விஜயை விமர்சிக்காததற்கு இந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் ஒரு காரணம். ஆனால் தற்போது விஜய் பேச்சு வார்த்தையே நடக்கவில்லை என கூறியதால் அதிருப்தியில் இருக்கும் டெல்லி பாஜக தலைமை, சிபிஐ, ஜனநாயகன் விவகாரம் மூலம் அவருக்கு நெருக்கடியை அதிகரிக்கும் என நாங்கள் நினைக்கிறோம். இருந்த போதும் கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை. சொல்லப்போனால் திமுகவை விட அதிமுக மீதுதான் விஜயின் கவனம் இருக்கிறது. அதிமுகவை இந்த தேர்தலில் படுதோல்வி அடையச் செய்தால் வரும் காலங்களில் எதிர்க்கட்சி ஆளுங்கட்சி என்ற நிலையை அடையலாம் என்பதுதான் விஜயின் கணக்கு" என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+