சீமானுடன் நட்பாக போங்க.. விஜய்க்கு பறந்த மெசேஜ்.. அட சான்ஸே இல்லைங்க.. விஜய் தந்த ரியாக்சன்!
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் நம்பிக்கைக்குரிய சில உதவியாளர்கள் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுடன் விஜய் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று அண்மையில் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆனால் விஜய் இதை ஏற்க மறுத்துவிட்டாராம்.. சீமான் தரப்பு நம்மை மிக கடுமையாக தாக்கி பேசி வருகிறது.. அவர்களுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும் என்று விஜய் ரியாக்சன் கொடுத்துள்ளாராம்.
ஏற்கனவே விஜயை பாஜக - அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர அமித் ஷா திட்டமிட்டு வருகிறார்.
ஏதாவது செய்யுங்கள்.. எந்த offer வேண்டுமானாலும் கொடுங்கள்.. விஜயை சம்மதிக்க வைத்து, தமிழக பாஜக, அதிமுக, மற்றும் TVK ஆகிய மூன்று கட்சிகளும் வரும் தேர்தலில் இணைந்து செயல்படுவதை உறுதி செய்யுமாறு ஈபிஎஸ்-க்கு அமித் ஷா அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் உள்ள உள்ளூர் பிரச்சினைகளில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து, இரு தலைவர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்க்குமாறும் அமித் ஷா, ஈபிஎஸ்-ஐ கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயுடன் கூட்டணி அமைப்பதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமியும் தொடங்கிவிட்டாராம்.
விஜய்க்கு போன அறிவுரை
ஆனால் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய விஜய் விரும்பவில்லை. அவர்களுடன் சென்றால் அரசியல் எதிர்காலம் கெட்டுவிடும்.. முக்கியமாக சிறுபான்மையினர் வாக்குகள் நமக்கு கிடைக்காமல் போய்விடும். சில சமயங்களில் தமிழக இளைஞர்கள் கூட நம்மை ஆதரிக்காமல் போய்விடுவார்கள்.. என்று விஜய் பர்சனலாக நினைக்கிறாராம். என்டிஏ கூட்டணிக்கு விஜய் தயக்கம் காட்டும் நிலையில், சீமானுடனான நட்பு அல்லது குறைந்தது ஒரு சுமூகமான உறவு பேணப்பட வேண்டும் என்று விஜய்க்கு நெருக்கமான சிலர் அறிவுரை வழங்கி உள்ளார்களாம்.
தேர்தல் வெற்றிகள் குறைவாக இருந்தாலும், சீமானுக்கு தமிழ்நாடு இளைஞர்கள் மற்றும் தமிழ் தேசியவாதிகள் மத்தியில் வலுவான ஆதரவு உள்ளது. தமிழ் அடையாளம், மொழி, பெருமை போன்ற உணர்வுகளைத் தூண்டும் வகையில் அவர் ஆற்றும் உரைகள் பலரிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.
சீமான் விஜய் கூட்டணி
இந்த உணர்வுகள் விஜய்யின் அரசியல் கருத்துக்களிலும் எதிரொலிப்பதைக் கண்ட உதவியாளர்கள், இரு தலைவர்களும் ஒரே வாக்காளர் தளத்திற்காக போட்டியிடுவதற்குப் பதிலாக, பரஸ்பர மரியாதையுடனும், எதிர்கால ஒத்துழைப்புடனும் செயல்படலாம்.. அதிமுக, பாஜக, திமுக என்று எல்லோரையும் எதிர்க்கும் விஜய் சீமான் போன்றவருடன் நட்பாக செயல்படலாம்.. என விஜய்யிடம் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், விஜய் எச்சரிக்கையுடன் செயல்படுகிறார். தமிழக வெற்றி கழகம் ஆரம்பகட்டத்தில் எந்த மாற்று அரசியல் தலைவர்களுடனும் சேராமல், தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். எந்தவொரு முறையான அல்லது முறைசாரா கூட்டணியில் நுழைவதற்கு முன், தமிழக வெற்றி கழகம் தனது சொந்த பலத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று விஜய் கருதுகிறார்.
சீமான் தரப்பை நம்மை மிக கடுமையாக தாக்கி பேசி வருகிறது.. முக்கியமாக கரூர் விவகாரத்தில் கடுமையாக நம்மை தாக்கி உள்ளனர். நினைத்துப்பார்க்க முடியாத சொற்களை எல்லாம் பயன்படுத்தி விமர்சனங்களை செய்து உள்ளனர். அவர்களுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும் என்று விஜய் ரியாக்சன் கொடுத்துள்ளாராம்.
-
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
நெல்லையில் தாமிரபரணி வரலாற்றுச் சுவடுகளை மறைத்து போஸ்டர்கள்.. தவெகவினர் செயலால் சர்ச்சை -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர்












Click it and Unblock the Notifications