3வது முறையாக.. கடலூரில் பிரச்சாரத்தை ரத்து செய்த விஜய்.. ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லாததே காரணமாம்!
சென்னை: சட்டசபைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் நாளை கடலூரில் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடலூரில் ரோடு ஷோ நடத்த அனுமதி கிடைக்கவில்லை என்றும், மஞ்சள் நகர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் தரப்பு பிரச்சாரத்தை ரத்து செய்ததாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் காலை, மதியம், மாலை என்று 3 நேரங்களிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக பிரச்சாரம் செல்ல, முதல்வர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். அதேபோல் உதயநிதி ஸ்டாலின் தொகுதி வாரியாக பிரச்சாரத்தில் இருக்கிறார்.

கனிமொழி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடித்து மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட தயாராகிவிட்டார். இன்னொரு பக்கம் திருமாவளவன், கமல்ஹாசன், பிரேமலதா விஜயகாந்த், வைகோ, அண்ணாமலை என்று ஒவ்வொரு கட்சியினரும் பிரச்சாரத்தில் சுழன்று வருகின்றனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் 3வது முறையாக கடலூர் பிரச்சாரத்தை ரத்து செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
கடலூரில் நாளை பிரச்சாரம் மேற்கொள்ள தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கடலூர் மஞ்சள் நகர் மைதானத்தில் தவெக தரப்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தவெக தரப்பில் ரோடு ஷோ நடத்தவும் அனுமதி கோரப்பட்டது. ஆனால் காவல்துறை தரப்பில் ரோடு ஷோவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இப்படியான சூழலில் விஜய் கடலூர் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார். ஏற்கனவே இன்று காலை பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாக சென்று விஜய் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. இந்த பிரச்சாரத்தையும் விஜய் ரத்து செய்திருந்தார். இதனால் விஜய்யின் மாற்று திட்டம் என்ன என்பதே தவெக தொண்டர்களின் கேள்வியாக இருக்கிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், பெரிய கட்சிகளே ஒரு நாளில் பல்வேறு மாவட்டங்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் விஜய் சென்னை பிரச்சாரம் முடிவடைந்து 3 நாட்களாகியும், இன்னும் அடுத்த பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருக்கிறார். இது தவெக தொண்டர்களிடையே சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
தவெகவில் சேர்ந்த 2 நாளில்! விஜய் விவாகரத்து வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்! யார் இந்த ப்ரீத்தி ஷெட்டி? -
அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல் -
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
இனி 8 ஆம் வகுப்பு வரை காலை உணவு.. திமுக திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முதல்வர் விஜய் -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்!












Click it and Unblock the Notifications