விஜய் எடுத்த அதிரடி முடிவு.. தவெக வேட்பாளர்கள் இன்று முதல் அறிமுகம்? திருச்செங்கோட்டில் வரும் அறிவிப்பு
சென்னை: சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களாக வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்ற நிலையில், இன்று சில தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. திருச்செங்கோட்டில் புஸ்சி ஆனந்த், செங்கோட்டையன் பங்கேற்கும் நிகழ்ச்சியில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் டாப் நடிகர்களில் ஒருவரான விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தமிழக சட்டமன்ற தேர்தல் தான் தனது கட்சியின் இலக்கு என்று அறிவித்த விஜய், ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்ததில் இருந்து அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.

இதனால், பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். தனது தலைமையை ஏற்று வரும் கட்சிகளுடன் கூட்டணி என அறிவித்துள்ள விஜய், அடுத்த கட்டமாக வரும் ஈரோட்டில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக்கழகம் இன்று முதல் தனது வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு இன்று முதல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். தொகுதி நிர்வாகிகளுக்கு மட்டும் அறிவிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
வேட்பாளர் இவர்தான் என கட்சியினருக்கு அடையாளம் காட்டினால், வீதி வீதியாக பிரசாரம் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும், வாக்காளர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் வேட்பாளர்களுக்கு கிடைக்கும் என்பதை மனதில் வைத்து விஜய் இந்த முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது. மற்ற கட்சிகள் விருப்ப மனு பெற தொடங்க உள்ள நிலையில், விஜய் கட்சியில் வேட்பாளர்களை சில தொகுதிகளுக்கு இன்றே அறிமுகம் செய்ய இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் தவெகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
முதல் கட்டமாக திருச்செங்கோட்டில் புஸ்சி ஆனந்த், செங்கோட்டையன், அருண் ராஜ் ஆகியோர் இன்று தவெக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் அங்கு போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொகுதிக்கு 4 பேர் வீதம் விஜய் தேர்வு செய்து வைத்துள்ளாராம்.. அதில் 60 சதவீதம் மாவட்ட செயலாளர்கள், பெண்களுக்கும், 40 சதவீதம் பிரபலங்கள், மாநில நிர்வாகிகளுக்கும் ஒதுக்கீடு செய்ய தவெக முடிவு செய்துள்ளது. சென்னை, திருச்சி, நெல்லை, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அப்பகுதியில் பிரபலமாக இருக்க கூடிய தியேட்டர் உரிமையாளர்கள் தவெக சார்பில் போட்டியிட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
-
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?..












Click it and Unblock the Notifications