கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் விஜய்வசந்த் போட்டி; பொன்.ராதாகிருஷ்ணனுடன் மோதுகிறார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் எச்.வசந்தகுமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல்… அப்பா தொகுதியில் மகன் போட்டி!

    இங்கு பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் களம் காண்கிறார். இருவருக்கும் இடையே பலத்த போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Vijay Vasanth contest in Kanyakumari Lok Sabha constituency

    திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது காங்கிரஸ் இதில் தாமதம் செய்து வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் 21 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் இன்று வெளியிடப்பட்டது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்களுமான திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோரின் மகன்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் எம்.பி.யாக இருந்த எச்.வசந்தகுமார் கொரோனாவால் உயிரிழந்தார். இதனால் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் வசந்த் , எச்.வசந்தகுமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் களம் காண்கிறார். எனவே விஜய் வசந்த்துக்கும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இடையே பலத்த போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+