சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிச்சையெடுத்து பிழைக்கலாமே... கமெண்ட் போட்ட நெட்டிசனுக்கு விஜயபிரபாகரனின் நெத்தியடி பதில்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவைப் பார்த்து பிச்சையெடுத்து பிழைக்கலாமே என்று கமெண்ட் அடித்த நபருக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார் விஜயபிரபாகரன்.

Google Oneindia Tamil News

சென்னை: பிச்சை எடுத்து இருந்தால் நாங்கள் வேற லெவலில் அரசியலில் இருந்து இருப்போம் என்று தன்னுடைய இன்ஸ்ட்டா கிராம் பக்கத்தில் கமெண்ட் அடித்த நபருக்கு பதில் கொடுத்திருக்கிறார் விஜயபிரபாகரன்.

Recommended Video

    பிச்சையெடுத்து பிழைக்கலாமே... கமெண்ட் போட்ட நெட்டிசனுக்கு விஜயபிரபாகரனின் நெத்தியடி பதில்

    லாக்டவுன் காலத்தில் பலருக்கும் பொழுதுபோக்காக இருப்பது சமூக வலைத்தளங்கள்தான். ட்விட்டர், பேஸ்புக் போல இன்ஸ்ட்டாவிலும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    நடிகைகள் மட்டும்தான் வீடியோ போட வேண்டுமா என்ன அரசியல்வாதிகளும் விதம் விதமாக வீடியோ போட்டோக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

    விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் சமீபத்தில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தவசி படத்தில் அப்பா விஜயகாந்த் நடித்து ஆடிய பாடலுக்கு வாயசைத்து நடனமாடியுள்ளார்.

    ஊட்டியில் குதிரை சவாரி செய்வது போல வீடியோவும் பதிவிட்டிருக்கிறார். அவர் வளர்த்து வரும் நாய்களுடன் போஸ் கொடுத்து போட்டோ பதிவிட்டுள்ளார்.

    'லட்சத்தீவு மக்களிடம் கலந்து ஆலோசிக்காமல்.. அங்கு எந்த சட்டமும் கொண்டுவரப்படாது'.. அமித்ஷா உறுதி! 'லட்சத்தீவு மக்களிடம் கலந்து ஆலோசிக்காமல்.. அங்கு எந்த சட்டமும் கொண்டுவரப்படாது'.. அமித்ஷா உறுதி!

    சட்டசபைத் தேர்தலின் மாநிலத்தில் பல தொகுதிகளில் பிரசாரம் செய்த வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார் விஜயபிரபாகரன். மதுரை, விழுப்புரம், விருதாச்சலத்தில் நடந்த பிரசார கூட்டங்களையும் பதிவிட்டுள்ளார் விஜய பிரபாகரன்.

    தேவையில்லாத சீன்

    தேவையில்லாத சீன்

    இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், தேர்தலில் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்கவில்லை எதற்கு இந்த தேவையில்லாத சீன், போய் பிச்சையெடுத்து பிழைக்கலாமே என்று பதிவு செய்திருந்தார்.

    நெத்தியடி பதில்

    நெத்தியடி பதில்

    இதற்கு பதிலளித்துள்ள விஜய பிரபாகரன், 'உங்களது மேலான கருத்துக்கு எனது நன்றி. உங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'முடியாதது எதுவும் இல்லை' என்று கூறியுள்ளீர்கள். அதையே நான் பின்பற்றுகிறேன். பிச்சை எடுத்து இருந்தால் நாங்கள் வேற லெவலில் அரசியலில் இருந்து இருப்போம்' என்று கூலாக பதிலடி கொடுத்துள்ளார்.

    கடைசி நேரத்தில் மாறிய கூட்டணி

    கடைசி நேரத்தில் மாறிய கூட்டணி


    நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் முதலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக அதிகமாக இடங்களை எதிர்பார்த்தது. 2011ஆம் ஆண்டு தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டது தேமுதிக. தற்போது அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் மதிப்பாக 20க்கும் மேற்பட்ட இடங்களை எதிர்பார்த்தது. 12 சீட் மட்டுமே தேமுதிகவிற்கு கொடுக்க அதிமுக முன்வந்தது. இதனால் கூட்டணியில் இருந்து பிரிந்தது அதிமுக.

    படுதோல்வியடைந்த தேமுதிக

    படுதோல்வியடைந்த தேமுதிக

    கடைசி நேரத்தில் அமமுக உடன் கூட்டணியமைத்து தேமுதிக போட்டியிட்டது. 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்ட நிலையில் ஒரு தொகுதிகளில் கூட வெற்றிபெறவில்லை. விருத்தாசலத்தில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த், டெபாசிட்டை பறிகொடுத்தார். இந்த படுதோல்விக்கு காரணம் பிரேமலதாவின் அவசர முடிவுதான் என்று விமர்சனம் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Vijaya Prabhakaran has responded to the person who made the comment by watching the video on the Instagram page and begging to survive.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X