பெவிகால் லோகோவை திருப்பி போட்டு இருக்காங்க.. விஜய் கட்சி கொடியை கலாய்க்கும் மீம்ஸ்
சென்னை: சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி, பாடலை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தவெக முழு அரசியல் கட்சி என்கிற வடிவத்தை பெற்றிருக்கிறது. ஆனால், தவெக கொடியானது, ஸ்பெயின் நாட்டின் கொடி போன்றிருப்பதாக சோஷியல் மீடியாக்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
கோலிவுட் திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வந்த விஜய், கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்து வந்திருந்தார். அவர் அரசியலில் இறங்கப்போவதாகவும், எனவேதான் இதுபோன்ற கதைகளில் நடிக்கிறார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன. இதனை உறுதி செய்யும் விதமாக கடந்த பிப்ரவரி மாதம் அவர் 'தமிழக வெற்றிக் கழகம்' எனும் கட்சியை தொடங்கினார். இது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது.

யாருடைய வாக்குளை விஜய் குறிவைக்கப்போகிறார் என்கிற கேள்வி எழுந்தது. ஆனால், கட்சியின் கொள்கைகள் என்ன? அரசியல் நிலைப்பாடு என்ன? யாருடன் கூட்டணி? அல்லது தனித்து போட்டியா? மாநில அரசியலா? தேசிய அரசியலா? என எந்த அறிவிப்பையும் விஜய் வெளியிடவில்லை. இது தொடர்பான கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது கட்சியின் கொடியை விஜய் அறிமுகப்படுத்தியுள்ளார். ஆனால் இந்த கொடி சோஷியல் மீடியாவில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

தவெக கொடி, ஸ்பெயின் நாட்டின் கொடியை போன்று இருப்பதாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ஸ்பெயின் நாட்டின் கொடியும், மேலும் கீழும் சிவப்பு நிறம் கொண்டு, நடுவில் மஞ்சள் நிறத்துடன் காணப்பட்டிருக்கும். ஆனால், அதில் யானைக்கு பதில் மன்னர் ஆட்சியின் அடையாளத்திற்கான சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்.

அதேபோல பலர் இந்த கொடியை ஃபெவிகால் லோகோ என்று விமர்சித்துள்ளனர். நீல நிறத்தில் யானைகள் இரண்டு எதிர் திசையில் இருப்பதை போன்று, ஃபெவிகால் லோகோ இருக்கும். இதனை திருப்பி போட்டு தவெக கொடியை வடிவமைத்திருக்கிறார்கள் என்றும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

வேறு சிலர், இது கேரள மாநிலத்தின் சின்னத்தை ஒத்திருப்பதாக கூறுகின்றனர். கேரளா மாநிலத்தின் சின்னத்தில் இரண்டு யானைகள் தும்பிக்கையை உயர்த்தியவாறு, ஒற்றை காலை தூக்கிக்கொண்டிருக்கும். நடுவில் சங்கும், இந்திய அரசின் சிங்க முத்திரையும் இருக்கும். எனவே அந்த மாநிலத்தின் சின்னத்தை கிண்டல் செய்யக்கூடாது என்று தவெகவை கலாய்த்து வருகின்றனர்.

இன்னும் சிலரோ, இது ஸ்பெயின் கொடியும் இல்ல.. கேரள சின்னமும் இல்ல.. இது ஷரோன் ப்ளைவுட் லோகோ, என்று கலாய்த்துள்ளனர். மஞ்சள் வட்டத்தில், பச்சை நிறத்தில் யானை ஒன்று, தும்பிக்கையை உயர்த்தியவாறு, ஒற்றை காலை தூக்கி நின்றுக்கொண்டிருக்கும். இதை கொஞ்சம் பட்டி, டிங்கரிங் பார்த்து, தவெக கொடி என்று கூறுகிறார்கள், என ட்ரோல் செய்து வருகின்றனர்.

வேறுசிலர், இது அதெல்லாம் இல்லீங்க! எங்க சங்கத்தின் கொடியை காப்பியடிச்சி, புது கொடினு கதை விடுங்கனு, சாதிய அமைப்புகளின் பெயரை குறிப்பிட்டு கலாய்க்க தொடங்கியுள்ளனர். அந்த அமைப்பை சேர்ந்தவராக இருந்தால் கூட இப்படி ட்ரோல் செய்திருக்கமாட்டார்கள் போல!












Click it and Unblock the Notifications