• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

டக்குனு போனை போட்ட சசிகலா.. தினகரனின் பிளானை நிறுத்தி "வார்னிங்".. பரபரக்கும் அமமுக

|

சென்னை: தேர்தல் ரிசல்ட்டுக்கு அனைவரும் பரபரப்புடன் காத்துள்ள நிலையில், சசிகலா - தினகரன் குறித்த "பாச தகவல்" ஒன்று கசிந்து வருகிறது.

சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதாக அறிக்கை வந்த நிலையில், இன்னொரு அறிக்கையும் வரும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது... ஆனாலும் அந்த முதல் அறிக்கையே இன்னமும் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை..

காரணம், சசிகலாவால் அரசியலை விட்டு முழுமையாக ஒதுங்கவும் முடியாது.. விலகவும் முடியாது.. இந்த விலகல் அறிக்கைக்கு பின்னணியில் வேறு ஏதேனும் பெரிதான காரணம் இருக்கலாம், அல்லது வேறு ஒரு தேசிய கட்சியின் அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்ற முணுமுணுப்புகள் அடங்கவே இல்லை.

 திடீர்னு எடப்பாடி வீட்டுக்கு போன ஓபிஎஸ்.. கையில் திடீர்னு எடப்பாடி வீட்டுக்கு போன ஓபிஎஸ்.. கையில் "3 ரிப்போர்ட்" இருந்ததாமே.. பரபர மேட்டர்கள்!

குடும்ப விழா

குடும்ப விழா

இதனால் சசிகலாவின் ஒவ்வொரு முடிவுகளும், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அசைவுகளும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.. குடும்ப விழாக்களில் கலந்து கொண்டார்.. நிறைய கோயில்களுக்கு சென்றார்.. சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார்.. என்று ஆன்மீக தகவல்கள் வந்தாலும், இதிலெல்லாம் அரசியல் இல்லாமல் இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சசிகலா

சசிகலா

இந்த ஆன்மீக பயணங்களின்போதே, அமமுகவை சேர்ந்த ஒருசில வேட்பாளர்கள் சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதேபோல, தேர்தல் சமயத்தில் சசிகலா சென்ற கோயில்கள் பெரும்பாலும் அமமுக நேரடியாக களம் காணும் தொகுதிகள் என்றும், இங்குள்ள கோயில்களுக்கு செல்லும்போது, அமது மறைமுகமாக அமமுகவுக்கு பயனளிக்கும் என்றும் கணக்கு போடப்பட்டது.

ஆன்மீக பயணம்

ஆன்மீக பயணம்

தென்மண்டலங்களில் அமமுகவுக்கு தானாகவே ஓட்டுக்கள் விழுந்து விடும் என்றாலும், சசிகலா மேற்கொண்ட அந்த 10 தொகுதிகளில் இழுபறி நிலை வரலாம் என்று ஒரு கணிப்புகள் வந்ததால், அந்த இடங்களை தேர்ந்தெடுத்துதான் சசிகலா ஆன்மீக பயணம் செய்ததாகவும் கூறப்பட்டது. இதெல்லாம் எதற்காக என்றால், தினகரனுக்காக மட்டுமே...!

அறிவிப்பு

அறிவிப்பு

அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்ததுமே அன்று இரவெல்லாம் தூங்காமல் தவித்தார் தினகரன்.. உடனடியாக ஆதரவாளர்களை வரவழைத்து விடிய விடிய ஆலோசனையும் நடத்தினார்.. இதற்கு பிறகுதான், சசிகலாவின் மறைமுக ஆதரவு இப்படி வெளிப்பட்டது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..

கல்யாணம்

கல்யாணம்

இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. டிடிவி தினகரனின் மகள் திருமணம், ஜூன் 13-ம் தேதி திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயிலில் நடக்க உள்ளது.. இந்த கல்யாணத்தை சசிகலாதான் நடத்தி வைக்க போகிறார்.. இது சம்பந்தமாக சொந்தக்காரர்களுக்கு பத்திரிக்கை வைக்க வேண்டியிருப்பதால், டெல்டா மாவட்டம் முழுவதும் செல்ல ரெடியாகி இருக்கிறார்.

போன்

போன்

இந்த விஷயம் தெரிந்து உடனடியாக போனை போட்ட சசிகலா, "கொரோனா நேரத்துல ஏன் இப்படி தேவையில்லாம வெளியே சுத்துற? யாராக இருந்தாலும் அவங்க எல்லாருக்கும் போஸ்ட்டுலயே பத்திரிகையை அனுப்பி வெச்சுடு.. அப்பறம் போன் பண்ணி அவங்ககிட்ட பேசு.. ரொம்ப முக்கியமானவர்கள், தவிர்க்க முடியாதவர்கள் இருந்தால் மட்டும் நேரில் போய் அழைச்சுட்டு வா.. கொரோனா பரவல் அதிகமாக இருக்கு" என்று கண்டித்தாராம்.. இதை கேட்டதும், தன் பிளானை அப்படியே டிராப் செய்துவிட்டாராம் தினகரன்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இவர்கள் பாசம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த கல்யாணத்தன்றுதான், சசிகலா நீண்ட நேரம் பேச போகிறாராம்.. அன்றைய தினம்தான் அவரது ரீ என்ட்ரி குறித்த தகவல் ஏதாவது வெளியாகும் அஎன்கிறார்கள்.. அல்லது அதற்குள் ரிசல்ட்டும் வந்துவிட்டிருக்கும் என்பதால், அதிமுக பற்றின கருத்தையும் வெளியிட நிறைய வாய்ப்பு இருக்கும் என்கிறார்கள்.. அதனால் கல்யாணத்தன்று சசிகலா என்ன பேச போகிறார் என்று அதிமுக காதை தீட்டி வைத்து காத்திருக்கிறதாம்..!

English summary
VK Sasikala advices TTV Dinakaran on his Mini Tour
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X