இதுதான் தமிழ்நாடு போலீசின் மனித நேயம்.. கர்நாடகா பைக்கரை தடுத்து நிறுத்தி செய்ததை பாருங்க.. வீடியோ
சென்னை: இருசக்கர வாகனத்தில் சென்ற கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை தடுத்து நிறுத்திய ராமநாதபுரம் போலீசார், பேருந்தில் சென்று கொண்டிருக்கும் ஒரு பெண் தவறவிட்ட மருந்தை ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
அதன் பேரில் அவரும் விரைந்து சென்று பேருந்தை பிடித்து மருந்தை ஒப்படைத்தார். இந்த வீடியோ மூலம் தமிழக போலீசாரின் மனிதநேயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக போலீசார் வண்டியை மறித்தாலே பயம் வந்துவிடும் பலருக்கு. காரணம்.. ஹெல்மெட் போடவில்லை... இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் ஓட்டுகிறீர்கள்.. வண்டிக்கு ஆவணங்களை காட்டுங்கள் , மது அருந்தி உள்ளீர்களா என்று கேள்விகள் கேட்பார்கள். இந்த கேள்விகளில் ஹெல்மெட் போடவில்லை என்ற கேள்வி பலருக்கும் ஒவ்வாமையாக இருக்கும்.

சோதனை
போலீசாரின் வாகன சோதனையை கண்டு பலரும் ஆவேசமான கருத்துக்களை பேசுவதும், அவர்களை வெறுப்பதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள். ஆனால் அதை எல்லாம் சற்றும் கவலைப்படாமல், தமிழக போலீசார்(ஒருசிலரை தவிர) சரியான அணுகுமுறையுடன் மக்களுக்காக பணியாற்றி வருகிறார்கள்.

போலீசார் கேட்டனர்
சரி விஷயத்துக்கு வருவோம். கர்நாடகவைச் சேர்ந்த பைக் பிரியர் .இவர் பெயர் அருண் என்று கூறப்படுகிறது.(உறுதியாக தெரியவில்லை) இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை நடுவழியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர் இத்தனைக்கும் ஹெல்மெட் அணிந்திருந்தார்.

பஸ்ச பிடிச்சிடலாம்
ஏன் நம்மை மறிக்கிறார்கள் என்று யோசித்தபடி வாகனத்தை நிறுத்திவரிடம் போலீசார் ஒரு வேண்டுகோள் வைத்தனர். இந்த ரோட்டில் ஒரு கவுர்மெண்ட் பஸ்சு போகுது. அதுல ஒரு அம்மா, இந்த மருந்தை தவற விட்டுட்டு போயிட்டாங்க. அடுத்த ஸ்டாப்ல இறங்கிடுவாங்க.. பஸ்ஸை மறித்து கொடுத்திடுங்க..போயிறலாம். பஸ்ச பிடிச்சிடுலாம் என்கிறார் அந்த போலீஸ்காரர்.

மனித நேயம்
இதையடுத்து பைக் பிரியர் , வாகனத்தை விரைவாக ஓட்டிச் சென்று அரசு பேருந்தை ஓவர் டேக் செய்து வழிமறித்தார். அந்த பெண்ணிடம் மருந்தை ஒப்படைத்தார். அந்த பெண்ணும் நன்றி தெரிவித்தார். இந்த காட்சிகளை முழுமையாக வீடியோ எடுத்துள்ளார் அந்த பைக் பிரியர். சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது வீடியோ. போலீஸ்காரரின் மனித நேயத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு உயர் அதிகாரிகள் சல்யூட் அடித்து நன்றி தெரிவித்துள்ளனர்.