தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் ஹேப்பி நியூஸ்!
சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் முக்கிய அணைகள் நிரம்பியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதேபோல், மழையால் பல்வேறு ஆறுகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

கடந்த 24 மணி நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தின் தண்டராம்பேட்டை மற்றும் கலசப்பாக்கத்தில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது. அவலாஞ்சி பூந்தமல்லி, கலவாய் தலா 3 செமீ மழை மழையும், ஏசிஎஸ் கல்லூரி, செம்பரம்பாக்கம், திருவண்ணாமலை, ஆத்தூர், திருக்கோவிலூர் சென்னை விமான நிலையம், உத்தமபாளையம், திருவள்ளூர் பரங்கிப்பேட்டை, திருத்தணி, கொரட்டூர் தலா 2 தலா செமீ மழையும் பதிவாகியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர், குந்தா பாலம், எமரலாடு, திருவாலங்காடு, தரங்கம்பாடி, பெரம்பூர், திருத்தணி, திரூர் ஆகிய இடங்களில் தலா 1 தலா செமீ மழையும் பதிவாகியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில், இன்று முதல் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 20- தேதியும், 21-ம் தேதியும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு வானிலை மையம் சார்பில் எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
-
நைட் முழுக்க கொட்ட போகுது மழை.. சென்னை உட்பட 26 மாவட்டங்களில் குளுகுளு கிளைமேட்! வானிலை மையம் அலர்ட் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications